Ajith Kumar: ரெடியா மாமே.. அஜித்குமாரின் அடுத்த படம் எப்போது? அவரே தந்த அப்டேட் அதுதான்!
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான அஜித்குமார் தன்னுடைய அடுத்த படம் எப்போது தொடங்கும்? என்று தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி கடந்த ஏப்ரல் அமாதம் 10ம் தேதி ரிலீசானது. அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குப்ட பேட் அக்லி என இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் அடுத்த படம் எப்போது தொடக்கம்?
தற்போது முழு மூச்சில் அஜித்குமார் கார் பந்தயத்தில் இறங்கியுள்ள நிலையில், அவர் கார் பந்தயங்களிலும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார். இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, எனது புதிய படத்தை இந்தாண்டு நவம்பரில் தாெடங்க உள்ளேன். அந்த படம் வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறினார்.
இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை யார் இயக்க உள்ளார்? யார் தயாரிக்கின்றனர்? என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில், அந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இயக்குனர் யார்?
அந்த படத்தின் கிளைமேக்ஸில் காரின் எண்ணில் ஏகே 64 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார் என்றும் அப்போதே தகவல் வெளியானது. அதேசமயம் அஜித்குமார் பிரசாந்த் நீல் மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
அஜித்குமார் அடுத்து நடிக்கும் படம் ஆக்ஷன் படமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கினாலும் அந்த படத்தை அவரது ரசிகர்களுக்கான படமாக இயக்காமல் அனைவருக்குமான படமாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் யார்?
ஏனென்றால், குட் பேட் அக்லி படம் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றாலும், கதையாக அந்த படத்தின் மீது பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனால், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நல்ல கதை மற்றும் வலுவான திரைக்கதை உள்ள படமாக அதை இயக்குவார் என்றே கூறப்படுகிறது.
விஷ்ணுவர்தன் அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் என்ற இரண்டு ஸ்டைலிஷான ப்ளாக்பஸ்டர் படத்தை இயக்கியவர், பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து கேஜிஎஃப் வரிசையில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனால் விரைவில் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? அந்த படத்தின் தயாரிப்பாளர்? யார்? என்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















