மேலும் அறிய

BMW வாகனத்தில் பறக்க இருக்கும் அஜித்... தனது பைக்குடன் போஸ் கொடுத்த வீடியோ காட்சி!

நடிகர் அஜித் தனது ஆஸ்தான வாகனமான BMW பைக்கை முறுக்கும் 5 விநாடி காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூல் ரீதியாக வெற்றியடைந்த வலிமை, அதனைத் தொடர்ந்து Zee 5 இல் OTT தளத்தில் படம் வெளியானது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத்துடன் இணைந்துள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். 

'ஏகே 61' ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய  வந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது ஆஸ்தான வாகனமான BMW பைக்கை முறுக்கும் 5 விநாடி காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ஷூட்டிங் தளத்திற்கு எங்கு போனாலும் தன்னுடன் தன் BMW பைக்கை எடுத்து செல்வது வழக்கம். அந்த பைக் மூலம் ஷூட்டிங் நடக்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடுவார். 

அந்தவகையில், தற்போதும் ஹைதராபாத்திற்கு தனது BMW பைக்கை எடுத்து சென்றுள்ளார். இந்த காட்சிகள் ஹைதராபாத் BMW மோட்டார்ராட்-ல் எடுக்கப்பட்டதாகவும், அதில் வெள்ளை ஷர்ட் மற்றும் கருப்பு கோர்ட் அணிந்து ak 61 கெட்டப்பில் இருந்ததாகவும் தகவல் பரவி வருகிறது. 

முன்னதாக, இளம் நாயகி ரகுல் ப்ரீத் சிங் 'ஏகே 61'நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இவர் ஏற்கனவே, சூர்யாவுடன் என் ஜி கேவில் நடித்த ரகுல், இந்தியன் 2, அயலான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அடுத்து அஜித் திரைப்படத்திலும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படத்தில் ரகுல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நடிப்பதாகவும் கூறப்பட்டது. அவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தெரிகிறது. அதுமட்டுமின்றி,  தபு, யோகி பாபு பிரகாஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய நடிகர்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget