Throwback: ”எனக்கு முன்கோபம் அதிகம்... இதனால்தான் ரசிகர்களை சந்திப்பது இல்லை” - நடிகர் அஜித்
ஒரு படத்தை பிரபலப்படுத்துவது முக்கியம்தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கு
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார் அஜித், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க , தற்போது AK என அழைக்கப்படுகிறார். அஜித் குமார் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் விரும்பக்கூடியவர்,பொது நிகழ்ச்சிகள் ,பத்திரிக்கை நிகழ்ச்சிகள் என எதிலுமே கலந்துக்கொள்ள மாட்டார். அது எதற்காக என்பது குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் அஜித்.
View this post on Instagram
அதில் “எனக்கு முன்கோபம் அதிகம். நான் என்னுடைய வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு சில விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றால் அப்படியே சொல்லிடுவேன். மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேச தெரியாது. எதையும் சுற்றி வளைத்து பேசமாட்டேன். மற்றவர்கள் நம்மிடம் டேட் கேக்கலாம், சிலவற்றை செய்ய சொல்லி கேட்கலாம். ஆனால் ரசிகர்கள் நடிகர்களிடம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. அதிகபட்சம் அவர்களின் ஆசை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்வதுதான். நான் தனிமையா இருக்குறதை விரும்புறவேன். அடிப்படையிலேயே நான் பிரைவட் பர்சன்தான். நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் கிடையாது. நிறைய சந்திச்சிருக்கேன். ஒரு படத்தை பிரபலப்படுத்துவது முக்கியம்தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கு. எனது ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான், தயவு செய்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். நேரம் ரொம்ப பொண்ணானது. இளமை இருக்கும் பொழுது அதை சரியா பயன்படுத்திக்கொள்ளுங்கள். நான் என் ரசிகர்களை ரொம்ப நேசிக்கிறேன். நான் கொடுத்த தோல்விகளை வேறு எந்த நடிகராவது கொடுத்திருந்தால் காணாமல் போயிருப்பாங்க.” என அஜித்குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram