Ajith kumar: விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்...எங்கே செல்கிறார் தெரியுமா?
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூர் மனைவியும், மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள் வந்ததால் அன்றைய தினம் AK 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
![Ajith kumar: விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்...எங்கே செல்கிறார் தெரியுமா? Actor ajith photo viral in social media AK61 Final Schedule Shoot Starting Today Ajith kumar: விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்...எங்கே செல்கிறார் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/8f9306013183519e40ecbb1bfe528d3c1660621183027224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்திற்கு நடிகர் அஜித்குமார் பேருந்தில் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Latest pic 💥💥#AjithKumar || #Ak61 || #TeamPhoenixBangalore pic.twitter.com/TQfTmN0wcz
— KARNATAKA AJITH FANS CLUB (Team Phoenix) (@Karnataka_AFC) August 16, 2022
1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம புத்தகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித் சமீபத்தில் திரையுலகில் தனது 30வது ஆண்டை நிறைவு செய்தார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கிய வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
#AjithKumar#Ajithkumar𓃵 #AK61
— Rameshwaran (@Rameshwaran1810) August 16, 2022
♥️ pic.twitter.com/zDIJIFNn7K
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் இன்று முதல் AK 61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியானது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் நிலையில் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து செம ஸ்மார்ட்டாக மாறினார்.
#AjithKumar sir ❤️ Latest Video From Chennai Airport.. #AK61 Final Schedule Starting Today 🤩#AK pic.twitter.com/G9uu9WAunl
— Ajith Dulquer Fc (@AjithDQ_FC) August 16, 2022
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூர் மனைவியும், மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள் வந்ததால் அன்றைய தினம் AK 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்த பணியாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், அங்கிருந்து விமானத்திற்கு பேருந்தில் சென்ற வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை #AjithKumar என்ற ஹேஸ்டேக்கோடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)