மேலும் அறிய

விஜய் பற்றி தவறாக பேசிய நடிகரை தனது படத்திலிருந்து தூக்கிய அஜித்!

தேர்தலின் போது தவெக தலைவர் விஜய் குறித்து தவறாக பேசிய துணை நடிகரை நடிகர் அஜித் தனது படத்தில் இருந்து நீக்கச் சொன்னதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன

அஜித் குமார் அடுத்து நடிக்கும் ஏகே 64 படத்தில் இந்த நடிகர் நடிக்க இருந்ததாகவும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த நடிகர் தொடர்ச்சியாக விஜய் குறித்து தவறாக பேசியதால் அவரை தனது படத்தில் இருந்து நீக்கும்படி அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்டுக்கொண்டதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. 

கோலிவுட் திரையுலகில் கிட்டதட்ட ஒரே சமயத்தில் நடிக்க வந்தவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரது படங்கள் ஒரே நாளில் வெளியானாலே திரையரங்குகள் படாதபாடு பட்டுவிடும். கடைசியாக வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகின. அஜித் விஜய் இடையில் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று போட்டி நிலவி வந்த நிலையில்தான் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்குள் நுழைந்தார். மறுபக்கம் அஜித் தனது ரேஸிங் கரியரை மீண்டும் துவங்கினார் . தற்போது சினிமாவைக் காட்டிலும் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அஜித் . அதே  நேரம் விஜய் சினிமாவை முழுவதுமாக ஒதுக்கிவைத்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். 

சினிமாவில் இருவருக்கும் இடையில் நீடித்து வந்த போட்டி இல்லாத காரணத்தினாலேயே தற்போது இருவரது ரசிகர்களிடையே ஒரு நல்லுறவு உருவாகியுள்ளது. குறிப்பாக கரூர் விபத்தில் அஜித் விஜய்க்கு ஆதரவாக பேசியது விஜய் ரசிகர்களிடையே அஜித்திற்கு பெரிய மரியாதையை ஏற்படுத்தி தந்தது. மற்ற நடிகர்கள் வெளிப்படையாகவே விஜயை நேரடியாக விமர்சித்து வரும் நிலையில் அஜித் விஜய் குறித்து எந்த வித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. 

விஜய் பற்றி தவறாக பேசிய நடிகர் நீக்கம் 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் கடும் பிரச்சாரங்கள் மேற்கொண்டன. இதில் விஜய்க்கு எதிராக ஒருசில திரைப்பட நடிகர்கள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தனர். நடிகர் சத்யராஜ் , பிரகாஷ் ராஜ் ஆகிய நடிகர்கள் விஜயை நேரடியாக விமர்சித்தனர். அப்படி விஜயை விமர்சித்த துணை நடிகர் ஒருவரை நடிகர் அஜித் தனது படத்தில் இருந்து நீக்கியுள்ளதாக இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது

அஜித் அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் Ak64 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நடிகர் சமீபத்தில் விஜய் குறித்து தவறாக பேசியதால் அவர் தனது படத்தில் நடிக்க வேண்டாம் என அஜித் ஆதிக்கிடம் கேட்டுக்கொண்டதாக வலைப்பேச்சு யூடியுப் சேனல் தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget