மேலும் அறிய

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?

அஜித்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு டேர்டெவில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகராக உலா வருபவர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக நடிக்காமலே இருந்து வந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், இன்று அந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

டேர்டெவில்:

அஜித்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு டேர்டெவில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை அஜித்குமாரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அஜித் கேட்ட சம்பளத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், இந்த படத்தை அஜித்தே தயாரிக்கிறார். ப்ரேவ்ஹார்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஷாலினி அஜித்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். சுப்ரீம் சுந்தர் சண்டைப்பயிற்சி மேற்கொள்கிறார். கல்யாண் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். அஜித்தின் மிகத் தீவிரமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

ஒரு வருடத்திற்கு பிறகு அப்டேட்:

குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு மீண்டும் ஆதிக் இயக்கத்திலே அஜித்குமார் நடிப்பது உறுதியானது. அஜித்குமார் தனது நீண்ட நாள் கனவான கார் பந்தயம் மீது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். சொந்தமாக தனக்கென கார் பந்தய அணியை உருவாக்கி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த சூழலில், சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு அஜித் படத்தின் அப்டேட் வந்துள்ளது. அஜித் கார் பந்தயத்தில் தீவிரம் காட்டி வருவதாலும், அவர் சொந்தமாக அணி நடத்தி வருவதாலும் தனது சம்பளத்தை உயர்த்தினார். இந்த சூழலில், அவர் கேட்ட ஊதியத்தை எந்த தயாரிப்பாளரும் தர முன்வராத சூழலில் அஜித்தே இந்த படத்தை தயாரிக்கிறார்.

சொந்த தயாரிப்பு ஏன்?

ப்ரேவ் ஹார்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தனது மனைவி ஷாலினி அஜித்குமார் பெயரில் இந்த படத்தை தயாரிக்கிறார். 63 படங்களில் நடித்த அனுபவம் மூலமாகவும் அஜித் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை அவரே தயாரிப்பதால் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கதாநாயகி, வில்லன் ஆகியோரது ஊதியமே பெரிய செலவாக கருதப்படுகிறது. அஜித்தே இந்த படத்தை தயாரித்து நடிப்பதால் படத்தயாரிப்பின் செலவு குறையும் என்று கருதப்படுகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படத்தின் மற்ற கலைஞர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget