மேலும் அறிய

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?

’’பாஜக-வை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தி விஜய் தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்திருக்கும் நிலையில், தனுசை பாஜகவில் இணைத்து விஜய்க்கு எதிராக களமிறக்க பாஜக திட்டமிட்டு வருகிறது”

மன்றத்திற்கு புதிய கொடி, ரசிகர்களுடன் சந்திப்பு என திரைத்துறையில் இருந்து அடுத்த அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகிறார் நடிகர் தனுஷ். இன்று கூட திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து தன்னுடைய அரசியல் அறிவிப்புக்கும் நாள் குறித்திருப்பதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

புதிய கட்சியா? பாஜகவா?

ஆன்மீக அரசியல் என கூறி நடிகர் ரஜினி அரசியல் கட்சித் தொடங்க திட்டமிட்டு, அது நடைபெறாமல் போன நிலையில், அவர் விட்ட இடத்தை ரஜினியின் ஆசியோடு தொடர தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக தன்னுடைய ரசிகர் மன்றத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் தனுஷ், விரைவில் அரசியல் அறிவிப்பை வெளியிட ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அதே நேரத்தில் தனிக் கட்சித் தொடங்கி  விஜய், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாற்றாக இன்னொரு அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டில் உடனடியாக உண்டு செய்ய முடியுமா? என்ற சந்தேகமும் தனுஷ்க்கு இருப்பதால், புதிய கட்சித் தொடங்குவதற்கு பதில் பாஜகவில் இணைந்து, தேர்தல் அரசியலை செய்யலமா? எனவும் அவர் தன்னுடைய நெருக்கமான வட்டாரத்தில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தனுசை அழைக்கும் பாஜக – முடிவு என்ன ?

அதே நேரத்தில், பாஜக தலைமையும் தனுஷ் அந்த கட்சியில் இணைவதை விரும்புவதாகவும் இது தொடர்பாக தனுஷ் தரப்பிடம் பாஜக தேசிய தலைமையில் இருந்து முக்கிய நபர் ஒருவர் பேசிவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பிரபல கணக்காளர் ஒருவர் தனுஷ்க்கு ஆலோசனை வழங்கத் தொடங்கியிருப்பதாகவும் அவரின் வழிகாட்டுதல்படியே தனுஷின் அரசியல் பிரவேசம் இருக்கப்போவதாகவும் தெரிகிறது.

தனிக் கட்சி தொடங்குவதற்கு பதில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அடித்தளமாக இருந்த பாஜகவிலேயே இணைந்து, விஜய்க்கு எதிரான அரசியலை தமிழ்நாட்டில் முன்னெடுக்க தனுஷ் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

விஜய்க்கு எதிராக தனுஷ்

பாஜக-வை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தி விஜய் தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்திருக்கும் நிலையில், தனுசை பாஜகவில் இணைத்து, விஜய்க்கு எதிராக களமிறக்க பாஜக தலைமையும் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. புதுக் கட்சியா அல்லது பாஜகவா? என்பதை விரைவில் தனுஷ் அறிவிக்கவுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Embed widget