சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பாக தோன்றும்.. ரவி மோகனை சொல்கிறாரா ஆர்த்தி.. மீண்டும் பரபரப்பு
ரவி மோகன் தனது மகன்களை சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நேரத்தில் ஆர்த்தி காட்டமாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் ரவி மோகன் அண்மையில் தனது மகன்கள் இருவரையும் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த சந்திப்பின் போது ரவி மோகன் தனது மூத்த மகன் ஆரவ்வின் பிறதந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் போஸ்ட் ஒன்று மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரவி மோகன் - ஆர்த்தி
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரவி அறிமுகம் ஆனார். இப்படத்தின் வெற்றி மூலம் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் ஜெயம் ரவி தற்போது இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் காதல் ஜோடியாக அறியப்பட்ட ரவி - ஆர்த்தி தம்பதி அண்மையில் இருவரும் கருத்து வேறுபாட்டால் தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். திருமண முறிவுக்கு காரணம் ஆர்த்தி தான் என பல யூடியூப் தளங்களில் கிசுகிசுத்தனர். திருமண வாழ்க்கையில் ரவி ஏமாந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால், ஆர்த்தி இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
ரவி மோகன் குற்றச்சாட்டு
இதனிடையே ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். ஆர்த்தியின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் என்னை பணம் சம்பாதிக்கும் பொருளாக பார்த்ததாக கூறி ரவிமோகன் அறிக்கை வெளியிட்டார். மேலும், தனது மகன் விபத்தில் காயமடைந்ததை கூட என்னிடம் கூறவில்லை. பொய் சொல்லி விட்டார்கள் என்றும் அவர் ரவி மோகன் தெரிவித்தார். இந்த திருமண முறிவுக்கு ஆர்த்தியின் தாயார் தான் என்றும் கூறப்பட்டது. பிறகு ஆர்த்தியின் தாயாரும் பதில் அறிக்கை வெளியிட்டு எந்த ஒரு தாயும் மகளின் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்கமாட்டார்கள் என்றும் பதிலடி கொடுத்தார்.
ரவி மோகன் - கெனிஷாவுடன் காதல்
இந்த சூழலில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துகொண்டதுதான் புகைந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊத்தி எரியவிட்டது போல் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் எனக்கும் ரவி மோகனுக்கும் நட்புறவுதான் காதல் இல்லை என ஆரம்பத்தில் இருவருமே மறுப்பு தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டனர். ஆனால், தற்போது திடீர் காதலர்களாக வலம் வருவது போன்ற புகைப்படத்தை பார்த்து ஆர்த்தி மனம் உடைந்து போனார். ஏற்கனவே ஆர்த்தியும் - ரவி மோகனும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜீவானம்சமாக மாதம் ரூ.40 லட்சம் ஆர்த்தி கேட்டிருக்கிறார். ஆனால், இதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத ரவி மோகன் படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.
சூழ்ச்சி கொண்ட அன்பு
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாலும் மகன்கள் மீது பேரன்பு கொண்டிருக்கும் ரவி மோகன் அண்மையில் தனது இரண்டு மகன்களை சந்த்தித்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது மூத்த மகன் ஆரவ்வின் பிறந்தநாளை செலிபிரேட் செய்ததாகவும் பதிவிட்டார். குறும்பா பாடல் வரிகளோடு புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ஆர்த்தி தனது சமூகவலைதள பக்கத்தில் "ஜாக்கிரதை சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தோன்றும்" என பதிவிட்டுள்ளார். அண்மையில் ரவி மோகன் மகன்களை சந்தித்தது தொடர்பாகத்தான் இவ்வாறு ஆர்த்தி பதிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.






















