Ayali Serial: செல்லமா கையில் துப்பாக்கி.. அயலி எஸ்கேப் ஆனது எப்படி? இன்று சம்பவம்தான்
அயலி சீரியலில் அயலியின் துப்பாக்கி சிக்கிய நிலையில் அவர் எப்படி தப்பித்தார்? இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் செல்லம்மா அயலி கீபோர்டில் துப்பாக்கியை பார்த்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதிர்ச்சியில் ஜமுனா:
அதாவது செல்லம்மா வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு அயலி துப்பாக்கி வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அவ அவங்க அம்மா மாதிரியே போலீசாக பார்க்கிறாள் என்று சொல்ல ஜமுனா ஷாக் ஆகிறாள்.
மிஸ்ஸான துப்பாக்கி:
அயலி அப்படியெல்லாம் இல்லை என்று சொல்ல செல்லம்மா அதை நம்ப மறுக்கிறாள். தேவராஜ் என் பொண்ணு மேல பொய் சொல்லாத.. அவகிட்ட துப்பாக்கி இருந்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்க எல்லோரையும் மேலே கூட்டிட்டு சென்று கபோர்டை திறக்க அங்கு துப்பாக்கி இல்லை என்று தெரிய வருகிறது.
இதனால் எல்லோரும் செல்லம்மாவை திட்டி விட்டு செல்ல செல்லம்மா அயலியை பார்த்து கூடிய சீக்கிரம் மாட்டுவ என்று எச்சரிக்கிறாள். அதன் பிறகு அயலி சிவா உங்க அம்மா போட்டோ பின்னாடி இருந்து துப்பாக்கி எடுத்து நீங்கதானே எடுத்துட்டு வந்தீங்க.. எனக்கு தெரியும் என்று சொல்லி அவனை கட்டியணைக்க சிவா சந்தோஷப்படுகிறான்.
சிவாவின் அப்பா குறித்த தகவல்:
உனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல, அயலி சிவா எப்படி அங்கிருந்து துப்பாக்கியை எடுத்திருப்பான் என்பதை விளக்குகிறான். அதைத்தொடர்ந்து இவர்களுக்கு ஒரு போன் கால் வர சிவாவின் அப்பா குறித்து தெரிந்து கொள்ள போட்டோகிராபர் ஒருவரை சந்திக்கின்றனர்.
அவர் ஸ்டுடியோவில் போட்டோ இருக்க வாய்ப்பிருக்கு என்று சொல்லி அங்கே அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.




















