மேலும் அறிய

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!

2024ல் மீண்டும் ஆமிரின் வாழ்க்கையில் கௌரி ஸ்ப்ராட் நுழைந்துள்ளார். இவர்களின் நட்பு மீண்டும் துளிர்விட நாளடைவில் காதலாக மாறியது. கிட்டதட்ட இந்த ஜோடி ஒருவருடம் காதலித்தது. ஆமிர் கான் மும்பையிலும், கௌரி பெங்களூருவிலும் வசித்து வந்தனர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தொழிலதிபரான கௌரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்துக் கொண்டார். இன்று நடைபெற்ற நிகழ்வு ஆமிர்கானின் 3வது திருமணமாகும். 

இந்த திருமண நிகழ்வானது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கம் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் திருமணம்பாந்த்ராவில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இவர்கள் கடந்த 2025ம் ஆண்டு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு வாங்கினார். கடலை பார்த்தவாறு இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் ஆகியோரின் உறவு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது. ஆனால் 2024ம் ஆண்டு உறவினரான நுழத் கான் மூலமாக மீண்டும் ஆமிரின் வாழ்க்கையில் கௌரி ஸ்ப்ராட் நுழைந்துள்ளார். இவர்களின் நட்பு மீண்டும் துளிர்விட நாளடைவில் காதலாக மாறியது. கிட்டதட்ட இந்த ஜோடி ஒருவருடம் காதலித்தது. ஆமிர் கான் மும்பையிலும், கௌரி பெங்களூருவிலும் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் 2025ம் ஆண்டு தனது 60வது பிறந்தநாளை ஆமிர்கான் கொண்டாடும்போது கௌரி ஸ்ப்ராட்டை தனது துணை என வெளிப்படையாக அறிவித்தார். 

வராத இரண்டாம் மனைவி

இதனிடையே ஆமிர் கானின் திருமணத்தில் ராஜ் தாக்கரே, இரா கான், எல்லி அவ்ராம், இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆமிரின் முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரீனா தத்தா மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கிரண் ராவ் வராதது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேசமயம் இந்த நிகழ்வில் ஆமிர் கான் - ரீனா தத்தா என இருகுடும்ப உறவுகளும் ஒன்று சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது வைரலானது. 

Also Read: நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

ஆமிர்கானின் முந்தைய திருமணங்கள் 

ஆமிர் கானின் முதல் திருமணம் 1986 ஏப்ரல் 18 அன்று ரீனா தத்தாவுடன் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு ஜுனைத் கான் மற்றும் இரா கான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பின்னர் இயக்குநரான கிரண் ராவை 2005ம் ஆண்டு ஆமிர் கான் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ள நிலையில்  இந்த திருமண வாழ்க்கை 16 ஆண்டுகள் நீடித்தது. என்னதான் விவாகரத்து பெற்றாலும் ஆமிர், ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகிய இருவருடனும் ஒரு சுமூகமான உறவைத் தொடர்ந்து வருகிறார். அடிக்கடி இவர்கள் சந்தித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget