பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு எவ்வளவு தூரம் செல்லும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கின் இன்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் இல் 9.5 பிஎஸ் பவரையும், 5500 ஆர்பிஎம் இல் 9.9 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது

இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதற்கு 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அனைத்தும் கீழ்நோக்கி மாற்றும்படி உள்ளது

பஜாஜ் பிளாட்டினா 110 நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறு 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவைக் கொண்டுள்ளது

பஜாஜ் பிளாட்டினா 110 ஒரு லிட்டர் பெட்ரோலில் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வரை செல்லும்

சென்னையில் பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் மலிவான பைக்கான பிளாட்டினா 110 டிரம் பிரேக் ஆன்ரோடு விலை தோராயமாக ரூ 87,371 ஆக உள்ளது

பஜாஜ் பிளாட்டினா 110 ஒருமுறை முழு டேங்க் நிரப்பினால் நீங்கள் அதிகபட்சமாக 750 கிலோமீட்டர்கள் வரை செல்லலாம்.

இந்த பைக் முன் மற்றும் பின் இருபுறமும் 80/100-17 அளவிலான ட்யூப்லெஸ் டயர்களுடன் வருகிறது

முன் பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்,பின்புறம் சிபிஎஸ் கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பத்துடன் கூடிய 110 மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் மொத்த எடை 116 கிலோவாக உள்ளது