மேலும் அறிய

நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு திட்டமிட்டு விஜய் ஆதரவாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வரும் நிலையிலும் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், வெளியீட்டுக்கு முன்பே சமூக வலைதளங்களில் சர்ச்சையையும் சந்தித்தது. ஆனால், அந்த சர்ச்சைகளையும் தாண்டி தற்போது படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளின் போது நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய சில கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. இதையடுத்து, சில விஜய் ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். மேலும், 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை ஓடவிட மாட்டோம் என்றும், படத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் சில கணக்குகளில் பதிவுகள் வெளியாகின.

நெகட்டிவ் விமர்சனங்களைப் பரப்பிய விஜய் ஆதரவாளர்கள்

படம் இன்று அதிகாலை முதல் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், எக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஒரே மாதிரியான கருத்துகளுடன் பல பதிவுகள் வெளியிடப்படுவதால், இது திட்டமிட்ட நெகட்டிவ் பிரச்சாரமா என்ற கேள்வியும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

மறுபுறம், படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் முதல் பாகத்தின் பொழுதுபோக்கு அம்சங்களைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியின் நடிப்பு, குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய காமெடி காட்சிகள், ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. இதனால், சமூக வலைதளங்களில் நெகட்டிவ் பதிவுகள் பரவினாலும், திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை குறையவில்லை என திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களிலும் பல காட்சிகளுக்கு நல்ல அளவில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. வார இறுதி விடுமுறை என்பதால், குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. சமூக வலைதள விமர்சனங்களுக்கும், நேரடியாக படம் பார்த்த ரசிகர்களின் கருத்துகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாகவும், இறுதியில் ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்களின் திரையரங்கு வரவேற்பே தீர்மானிக்கும் என்பதையும் 'கட்டா குஸ்தி 2' வெளியீடு மீண்டும் நிரூபித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
நவம்பர் 20 வெளியாகும் 4 படங்கள்...சீன், ராமாயணா படத்தால் திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல்?
நவம்பர் 20 வெளியாகும் 4 படங்கள்...சீன், ராமாயணா படத்தால் திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
Embed widget