Laal Singh Chaddha on OTT: லால் சிங் சத்தா ஓடிடி ரிலீஸ் எப்போது...? படக்குழு தந்த அப்டேட்!
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா படம் உருவாகி உள்ளது.
அமீர் கான் நடிப்பில் ’லால் சிங் சத்தா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா படம் உருவாகி உள்ளது.
View this post on Instagram
நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.
View this post on Instagram
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் முன்னதாக ஜூலை 25ஆம் தேதி வெளியாகி தமிழ் ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படம் திரையரங்கில் வெளியாகி அடுத்த ஆறு மாதங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முன்னதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சி செட்டில் நடிகர் ஆமிர் கான் ஸ்மோக்கிங் பைப் கொண்டு புகைக்கும் ஃபோட்டோ ஒன்று வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.