90s கிட்ஸ் நினைவலைகளில் என்றும் நிற்கும் அந்த ‛7’
மற்றவர்களைப் போல் அவர்களுக்கும் ஒரு மனது உண்டு என்று பாராமல் திட்டுவதையும், கலாய்ப்பதையும் தாங்கி கொண்டு வாழ்பவர்கள் தான் இந்த 90 கிட்ஸ். 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நூற்றாண்டிற்கும் பாலமாக இருப்பவர்கள் தான் 90 கிட்ஸ்.
எங்கேயும், எப்போதும், எளிதாக வம்புக்கு இழுக்கப்படுபவர்கள் என்றால் அது 90 கிட்ஸ் தான். ஒரு பக்கம் 80களில் பிறந்தவர்கள் நாங்கள் தான் 90 கிட்ஸ் என்று சண்டைக்கு இழுக்கிறார்கள். மற்றொரு புறம் 2k கிட்ஸ் தான் சிறந்தவர்கள் என்று வம்பு இழுக்கிறார்கள். இந்த இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்கள் தான் இந்த பாவப்பட்ட 90 கிட்ஸ். மற்றவர்களைப் போல் அவர்களுக்கும் ஒரு மனது உண்டு என்று பாராமல் திட்டுவதையும், கலாய்ப்பதையும் தாங்கி கொண்டு வாழ்பவர்கள் தான் இந்த 90 கிட்ஸ். 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நூற்றாண்டிற்கும் பாலமாக இருப்பவர்கள் தான் 90 கிட்ஸ்.
இவர்கள் தற்போது தங்களது வாழ்வில் அன்றாடம் மிஸ் பன்னும் சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
ஆரஞ்சு மீட்டாய்:
2k கிட்ஸ் கடைக்கு செல்ல சொன்னால் தங்களது லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றில் கேம் விளையாடி கொண்டு போகாமால் எரிச்சல் அடைவார்கள். ஆனால் 90 கிட்ஸ் அவர்களுடைய சிறிய வயதில் கடைக்கு போக மிகவும் ஆசைப்படுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அங்கு கிடைக்கும் ஆரஞ்சு மீட்டாய் மற்றும் தேன் மீட்டாய் தான். கடையில் பொருட்களை வாங்கிய பிறகு 50 பைசா சில்லறைக்கு பதிலாக ஆரஞ்சு மீட்டாய் அல்லது தேன் மீட்டாய் கிடைக்கும். இதை வாங்கி சாப்பிடுவதற்கே ஒரு கூட்டம் கடைக்கு வரும்.
பார்லே-ஜி பிஸ்கேட்:
பிரிட்டானியா பிஸ்கேட் பிரபலம் அடைவதற்கு முன்பாக 90 கிட்ஸ் வாங்கி சாப்பிடும் ஆஸ்தான் பிஸ்கேட் பார்லே ஜி தான். 5 ரூபாய் பாக்கேட் வாங்குவதற்கு பலர் வீட்டில் சண்டை போட்டு 5 ரூபாய் வாங்க வேண்டிய சூழல் இருக்கும். கடந்த 2020ஆம் ஆண்டு ஊரடங்கின் போது கூட இந்த பிஸ்கேட்டின் விற்பனை மிகவும் அதிகரித்து. இதற்கு காரணம் 90 கிட்ஸ் தான் என்றும் கூறப்பட்டது.
கேம்ளின் பென்சில்:
90 கிட்ஸ் நட்ராஜ்,அப்சரா உள்ளிட்ட பென்சில்களை பயன்படுத்தி இருந்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது இந்த கேம்ளின் பென்சில் தான். ஏனென்றால் இந்த பென்சிலுக்கு பின்புறம் இருக்கும் ரப்பர் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தவறாக எழுதிவிட்டால் உடனே பென்சிலை திருப்பி அதை எளிதில் அழித்து விடலாம். அதுவே இந்த பென்சிலின் முக்கியமான அம்சம்.
கை வீடியோ கேம்:
2k கிட்ஸ் பிறந்தவுடன் அவர்களுக்கு மொபைல் போன் எளிதாக கிடைத்ததால் அவர்களுக்கு கையில் வைத்து விளையாடும் வீடியோ கேம் அதிகம் தேவைப்படவில்லை. ஆனால் 90 கிட்ஸ் அவர்களின் குழந்தை பருவத்தில் முதலில் கையில் வைத்து விளையாடிய வீடியோ கேம் சாதனம் தான். இந்த சாதனத்தில் இருக்கும் பிரீக் கேம் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
கான்ட்ரா:
கை வீடியோ கேம் விளையாட்டிற்கு பிறகு தொலைக்காட்சியில் இணைத்து விளையாடும் வீடியோ கேம் 90 கிட்ஸ்களின் பிரபலமான பொழுது போக்காக இருந்தது. அதில் இருவர் சேர்ந்து விளையாடும் வீடியோ கேம் விளையாட்டு என்றால் அது கான்ட்ரா தான். இந்த கேமில் வரும் லெவல்களை யாரும் முதலில் முடிப்பார்கள் என்று பலருக்குள்ளும் ஒரே போட்டி தான். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறைகள் இதற்கு என ஒரு கூட்டம் எப்போதும் சுற்றும்.
பூமரும் இலவச ஸ்டிக்கரும்:
90 கிட்ஸ் வாங்கும் ஒரே பபுள் கம் என்றால் அது பூமர் தான். அது எப்படி அவர்களுக்கு பழக்கமானது என்றால் ஸ்டிக்கர் மூலம் தான். அதாவது அப்போது பூமர் பபுள் கம் வாங்கினால் அதற்கு இலவசமாக ஒரு ஸ்டிக்கர் கிடைக்கும். இதை கையில் ஒட்டிக் கொண்டு விளையாடும் போது நண்பர்கள் முன் காட்டி மகிழ்வது 90 கிட்ஸ் பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்று.
கேப்டன் சுபாசா:
பொதுவாக 90 கிட்ஸ் பார்த்த தொலைக்காட்சி தொடர்கள் என்றால் அனைவரும் கூறுவது சக்திமான், போக்கிமான் என்பவை தான். ஆனால் 90 கிட்ஸ் தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்து பார்ப்பதற்கு அப்போதே விதைப்போட்ட ஒரு கார்ட்டூன் தொடர் என்றால் அது கேப்டன் சுபாசா தான். அனிமேக்ஸ் செனலில் வரும் இந்தத் தொடரில் நாயகன் அடிக்கும் டிரைவ் ஷூடர்கள் பார்ப்பதற்கு தினமும் மாலை பலர் டிவி முன்பு அமர்ந்திருப்பார்கள். இவை தவிர ஸ்கூபி டூ, த மாஸ்க், ஸ்வாட் கெட்ஸ், ஃபிளின்ஸ்டோன்ஸ், பாப்பாய் என்று 90 கிட்ஸ்களின் கார்ட்டூன் தொடர்களை அடிக்கு கொண்டே போகலாம்.