பிரேக்கப் சாங்கிற்கு நடனமாடிய கெத்து பாட்டி; இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரல்!
இன்ஸ்டாகிராம் நடன பிரபலம் 'டான்சிங்' ரவி பாலா ஷர்மா மீண்டும் ஒரு பட்டையை கிளப்பும் நடனத்துடன் வைரலாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராமின் பிரபலமான 'டான்சிங்' ரவி பால சர்மா மற்றொரு நடன வீடியோவுடன் திரும்பியுள்ளார், இந்த முறை, அவர் தனியாக இல்லை. "ஏ தில் ஹே முஷ்கில்" இன் ஹிட் பாடலான தி பிரேக் அப் சாங்கிற்கு ரவி பாலா எனர்ஜிடிக்கான ஒரு நடனத்தை வழங்கினார், மேலும் அந்த வீடியோ பார்ப்பவர்களை கவர்ந்துள்ளது. ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடித்த ஒரிஜினல் பாடலின் அசல் வீடியோவின் ஸ்டெப்களை அப்படியே இமிட்டேட் செய்து ஆடியுள்ளார். இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே இணையத்தை கவர்ந்தது மற்றும் பதிவேற்றிய ஒரே நாளில் அந்த வீடியோ 60 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளுடன், வீடியோ கிளிப்பின் கமென்ட் செக்ஷனில் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பார்ப்பதற்கு கிரேஸ்ஃபுல்லாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்து பலர் ஃபயர், ஹார்ட்டுகளை பறக்க விட்டாலும், இது போன்ற வீடியோக்களில் அவர் புதிதாக ஒன்றும் நடனம் ஆடிவிடவில்லை. அவருடைய இன்ஸடாகிராம் பக்கத்தில் இது போன்ற நடன வீடியோக்கள் நிறைய வைரல் ஆகி இருக்கும். சமீபத்தில் கடந்த 10 ஆம் தேதி இதே ஏ தில் ஹை முஷகில் திரைப்படத்தில் இடம்பெற்ற க்யூட்டி பை பாடலுக்கு தனது பேத்தியுடன் ஆடியிருந்த நடனம் வைரலாகி இருந்தது. அவரது பேத்தியுடன் ரவி பாலாவின் நடன கூட்டணி இணையத்தை கவர்ந்துபதிவேற்றிய சில நாட்களில் 80 ஆயிரம் பார்வைகளைக் கடந்திருந்தது. 8,000 -க்கும் மேற்பட்ட லைக்குகளுடன், பதிவின் கமென்ட் செக்ஷனில் நெட்டிசன்கள் பாசிடிவான ஆதரவு கொடுத்திருந்தார்கள்.
View this post on Instagram
முன்னதாக, தில் முதல் பாகல் ஹாய் திரைப்படத்தின் கோய் லட்கா ஹாய் பாடலில் ரவி பாலாவின் நடனம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இளஞ்சிவப்பு நிற இந்திய பாரம்பரிய உடையில், பாட்டி ஷாருக்கான் மற்றும் மாதுரி தீட்சித் ஆடியிருந்த ஒரிஜினல் பாடலின் ஸ்டெப்களை அப்படியே ஆடியிருந்தார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 60,000 லைக்குகளுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. ரவி பாலா லாகடவுனுக்கு பிறகுதான் இது போன்ற டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வைரல் ஆனார். இந்திய திரைப்படங்களின் கிளாசிக் பாடல்களை எடுத்து கிளாசிக் உடையில் எனர்ஜிடிக் நடனம் ஆடுவது அவரது தனித்தன்மை. 64 வயதில் ரவி பாலாவின் இந்த ஆற்றலும், புதிய விஷயங்களை முயற்சிப்பது, மனதின் ஆர்வத்தை செயல்படுத்தும் எண்ணம், இவையெல்லாம் இருக்கும் போது வயது என்பது வெறும் எண்தான் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் டான்சிங் பாட்டி.