நீதிமன்றம் கேட்ட நான்கு கேள்விகள்...அல்லு அர்ஜூன் சொன்னது என்ன ?
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழ்ந்தது தொடர்பாக அல்லு அர்ஜூனிடம் நீதிமன்றத்தில் நான்கு முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டன
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சர்ச்சை தற்போது பூதாரகரமாக வெடித்துள்ளது. முன்பு அல்லு அர்ஜூன் பக்கம் ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் தற்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளார்கள். மேலும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் அல்லு அர்ஜூன் வீட்டின் முன்பு கல்வீச்சு நடத்தியது இந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பான முழு விசாரணைக்கு ஆஜராகும்படி சிக்கடபள்ளி நீதிமன்றம் இன்று அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பியது
நீதிமன்றம் கேட்ட நான்கு முக்கிய கேள்விகள்
கிட்டதட்ட 3 மணிநேரம் நீண்ட இந்த விசாரணையில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அல்லு அர்ஜூன் பதிலளித்தார். அல்லு அர்ஜூனிடம் நீதிமன்றம் சார்பாக நான்கு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டன
திரையரங்க வருகைக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ?
அனுமதி மறுக்கப்பட்ட போதும் திரையரங்கத்திற்கு வர யார் முடிவு எடுத்தது ?
உங்கள் வருகையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியுமா ?
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்தது பற்றி உங்களுக்கு எப்போது தெரியும் ?
இந்த கேள்விகளுக்கு அல்லு அர்ஜூன் கொடுத்த பதில் தொடர்பான கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அல்லு அர்ஜூனுக்கு எதிரான வீடியோ ஆதாரம்
போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிகழ்விற்கு முழுக்க முழுக்க அல்லு அர்ஜூனின் அகம்பாவம் தான் காரணம் என தெலங்கானா முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
பத்து திரையரங்கத்திற்கு மேல் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு கொடுக்க முடியாது என காவல் துறையினர் படக்குழுவிடம் தெரிவித்தும் அல்லு அர்ஜூன் கேட்காமல் ஷோ காட்டிக்கொண்டு திரையரங்கத்திற்கு வந்ததாக ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார். திரையரங்கை விட்டு வெளியேறினால் மட்டுமே தங்களால் கூட்டத்தை கட்டுபடுத்த முடியும் அதனால் திரையரங்கைவிட்டு வெளியேறும் படி கேட்டும் அல்லு அர்ஜூன் மறுத்துவிட்டார். பின் ஏ.சி.பி மற்றும் டி.சி.பி இருவரும் சேர்ந்து அல்லு அர்ஜூன் வெளியேற வேண்டும் இல்லை என்றால் அவரது கைது செய்ய வேண்டியதாக இருக்கும் என்று கூறியபின்னரே அவர் கிளம்பியதாக ரேவந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்வின் வீடியோவைவும் தெலங்கானா காவல்துறை வெளியிட்டுள்ளது.