25 years of suryavamsam : சூர்யவம்சம்: 90's கிட்ஸின் nostalgic திரைப்படம் ! 25 வருஷம் ஓடிட்டுங்க!
தமிழ்நாட்டில் பல பெண்களுக்கு இந்த இட்லி உப்புமாவை அறிமுகப்படுத்தி வைத்ததே தேவையானிதான்.
![25 years of suryavamsam : சூர்யவம்சம்: 90's கிட்ஸின் nostalgic திரைப்படம் ! 25 வருஷம் ஓடிட்டுங்க! 25 years of suryavamsam is a nostalgic moment 25 years of suryavamsam : சூர்யவம்சம்: 90's கிட்ஸின் nostalgic திரைப்படம் ! 25 வருஷம் ஓடிட்டுங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/27/aae9b038e42c36de3edd418d377b363f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
”ஒரே பாட்டுல பணக்காரனாக இது ஒன்னும் சூர்ய வம்சம் படம் இல்லைங்க ...வாழ்க்கை “ இப்படி இன்றும் நம்மோடு வாழ்க்கை பொன்மொழியாக ஒன்றி போன படம் சூர்ய வம்சம். இந்த படத்திற்கு தற்போது வயது 25 . சூர்ய வம்சம் திரைப்படத்தில் வசனங்கள் காட்சிகள் அனைத்துமே 90’ஸ் கிட்ஸிற்கு நாஸ்டாலஜிக் மொமண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லைங்க!
சூர்ய வம்சம் வெற்றி :
1997 ஆம் ஆண்டு சரத் குமார், தேவயானி , ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியான திரைப்படம் சூர்ய வம்சம் . இந்த திரைப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடு வெள்ளி விழா கண்ட திரைப்படம் .படத்தில் சரத்குமார் அப்பா , மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ”உதவாக்கரை” மகன் எப்படி வாழ்க்கையிலும் காதலிலும் ஜெயித்து அப்பாவின் பெயரை பெருமைப்படுத்துகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் என்றாலும் படத்தில் ஏகப்பட்ட செண்டிமெண்ட் காட்சிகள் வரவேற்பை பெற்றன.
இட்லி உப்புமா:
இந்த பெயரை சொல்லும் பொழுதே அந்த காட்சி வந்து போகுது இல்லையா! ... தமிழ்நாட்டில் பல பெண்களுக்கு இந்த இட்லி உப்புமாவை அறிமுகப்படுத்தி வைத்ததே தேவையானிதான். பணக்கார அப்பா , சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்துக்கொண்ட மகளை பார்க்க முதன் முறையாக வீட்டிற்கு வரும்பொழுது வீட்டில் எதுவுமே இருக்காது. நேற்று வைத்த இட்லியை உதிர்த்து உப்புமா செய்து அப்பாவின் பாராட்டை பெறுவார் மகள். இதுதான் இட்லி உப்புமா உருவான வரலாறு என்றாலும் மிகையில்லைங்க!
மீம்ஸ் கிரியேட்டர்களை வாழ வைக்கும் தெய்வம் ;
எத்தனை தலைமுறை கடந்தாலும் இந்த படத்தின் வசனங்கள் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லைங்க... ஏன் சொல்லுறேன்னா ... 25 வருடங்கள் ஆனாலும் இன்றைக்கும் ஃபிரஷாக ஒரு மீம் கிரியேட் செய்ய உதவியாக இருப்பது சூர்ய வம்ச வசங்கள்தானே....”நீ ஒரு உதவாக்கரை...உன்னை நம்பி வந்த அவ ஒரு உதாவக்கரை..”, “ பாயசம் சாப்பிடுங்க ஃபிரண்ட் “, ” என்ற குடும்பத்துல எல்லாரும் .வந்தாச்சு “, இப்படி ஏகப்பட்ட டெம்ப்ளேட்டை கொடுத்த பெருமை நம்ம விக்ரமனைத்தான் சேரும்.
ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏங்க வைத்த பாட்டு !
சூர்ய வம்சத்தில் இடம்பெற்ற ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ, சலக்கு சலக்கு சருகை சேல என எல்லா பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பா நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது ...அட ! அட! அந்த பாடலை எப்படிங்க மறக்க முடியும் ..ஒவ்வொரு இளைஞர்களின் கனவை ஒரே பாட்டில் படமாக்கியிருப்பாரு இயக்குநர். ஏழையாக இருக்கும் ஹீரோ , ஹீரோயின் ஸீரோவில் இருந்து வாழ்க்கையை தொடங்கி , கோடீஸ்வரர் ஆவாங்க பாருங்க அதுதான் ஹைலைட் ... ம்ம்ம்ம்...ஒரே பாட்டுல பணக்காரனாக இது என்ன சூர்ய வம்சம் படமானு...ஒட்டுமொத்த தமிழகத்தையே ஏங்க வைத்த பாடல்.. அப்பறம் பின்னணி இசையையும் சேர்த்துக்கோங்க “ ஆஆஆன் அஅஅன்ஹ...ஆஆஆன் அஅஅன்ஹ..ஆஆ....ஆன் அஅ..அன்ஹ”
என்னங்க....நான் முன்பே சொன்ன மாதிரி சூர்ய வம்சம் திரைப்படம் ஒரு “nostalgic” தானே !
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)