1982 Anbarasin Kadhal: ரிலீஸ் தேதியை அறிவித்த ‘1982 அன்பரசின் காதல்’ படக்குழு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
உல்லா சங்கர் எழுதி இயக்கியுள்ள ‘1982 அன்பரசின் காதல்’ படம் வரும் மே 26 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்லா சங்கர் எழுதி இயக்கியுள்ள ‘1982 அன்பரசின் காதல்’ படம் வரும் மே 26 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் பல மொழி படங்களில் புரொடக்ஷன்ஸ் மேனேஜராக இருந்த உல்லா சங்கர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், உல்லாஸ் ஷங்கர், அமல் ரவீந்திரன், அருணிமா ராஜ், ஹரிஷ் சிவப்பிரகாசம் மற்றும் செல்வா ஆகியோர் நடித்துள்ளனர். ஏஞ்சல் இஷா புரொடக்ஷன்ஸ் மற்றும் தேவகன்யா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிஜு கரிம்பின்கலயில் மற்றும் ஷைன் அலியாஸ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜிஸ்பின் செபாஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.சிந்தாமணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரெய்லர் படத்தின் அழகான காட்சிகள், அதன் அற்புதமான மற்றும் உணர்ச்சிகரமான கதையுடன் ஒரு பார்வையை அளிக்கிறது.
இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ‘1982 அன்பரசின் காதல்’ படத்தைப் பற்றி இயக்குநர் உல்லா சங்கர் கூறுகையில், “கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அந்தப் பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயல்கிறான். அவனால் வெளிப்படுத்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர். மனம் தளராத அன்பரசு, காதலி இருக்கும் கேரளாவிற்குச் சென்று அவளிடம் காதலை கூற முற்படுகையில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது.
அதிர்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா? என்பதைக் கதைக்களமாக்கி, ரசிக்கத்தக்க வகையில் வசனம் எழுதி பரபரப்பான திரைக்கதை அமைத்து எனது முதல் படமாக இதை டைரக்ட் செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். மேலும் இது பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை கவர்ந்திழுக்கும். தமிழ் சினிமாவின் அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டிய படமாக இது இருக்கும் எனவும் உல்லா சங்கர் கூறியுள்ளார். நிச்சயம் இப்படம் தியேட்டரில் வெளியாகும்போது வரவேற்பை பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.