திருமணம் செய்து கொள்ளும் நயன்தாரா.. 15 சுவாரஸ்யத் தகவல்கள் இதோ...!
வரும் ஜூன் 9 அன்று தனது திருமணத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. இந்நிலையில், நடிகை நயன்தாரா குறித்த 15 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்..
வரும் ஜூன் 9 அன்று தனது திருமண நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலான மொழிகளின் திரைத்துறையில் தன் சிறப்பான பங்கிற்காகப் பாராட்டப்படும் நயன்தாரா, தென்னிந்திய திரைத்துறையில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலிலும் இடம்பெறுகிறார். அவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் மிகப் பிரபலமாக மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை.
இந்நிலையில், நடிகை நயன்தாரா குறித்த 15 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்..
1. கடந்த 1984ஆம் ஆண்டு, நவம்பர் 18 அன்று கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் பிறந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். நயன்தாரா, கேரளா மாநிலத்தின் திருவல்லா பகுதியைச் சேர்ந்த செல்வந்தர்களாக கொடியாட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்.
2. நயன்தாராவின் தந்தை இந்திய விமானப் படை அதிகாரி என்பதால், அவரும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு செல்வது வழக்கம். தன் கல்வியை குஜராத், டெல்லி முதலான பகுதிகளில் பயின்றார் நயன்தாரா.
3. திருவல்லாவின் மர்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார் நயன்தாரா.
4. மலையாளத் திரையுலகில் அறிமுகமான பிறகு, நயன்தாராவின் வாழ்க்கை முழுவதுமாக மாறியது. கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் பெயர், `மனஸ்ஸினாக்கரே’.
5. கடந்த 2005ஆம் ஆண்டு, `ஐயா’ படத்தில் செல்வி என்ற கதாபாத்திரம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நயன்தாரா.
6. கடந்த 2007ஆம் ஆண்டு, தெலுங்கு சினிமாவில் `யோகி’ என்ற படத்தில் நந்தனி என்ற கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானார் நயன்தாரா.
7. இதுவரை ஒரே ஒரு கன்னடத் திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. கடந்த 2010ஆம் ஆண்டு, நயன்தாரா நடித்த கன்னடத் திரைப்படமான `சூப்பர்’ வெளியானது.
8. கடந்த 2007ஆம் ஆண்டு, `சிவாஜி’ படத்தில் முதல்முறையாக கேமியோ செய்தார் நயன்தாரா.
9. `வல்லவன்’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் சிம்புவுடன் நயன்தாரா உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. எனினும், சில நாள்களில் அந்த உறவு முடிவுக்கு வந்தது.
10. இயக்குநரும், நடிகருமான பிரபுதேவாவுடனான அவரது உறவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
11. கடந்த 6 ஆண்டுகளாகத் தன்னுடன் காதல் உறவில் உள்ள இயக்குநர் விக்னேஷ் சிவனைக் கரம்பிடிக்கிறார் நயன்தாரா.
12. கடந்த 2011ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7 அன்று இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா. சென்னையில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலில் இந்து மதம் தழுவிய நயன்தாரா, அங்கு கூறப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளார்.
13. வழக்கத்தை விட கூடுதல் விரல்களைக் கொண்ட நபர் நயன்தாரா. அவரது இடது கையில் கூடுதலான விரல் ஒன்று உண்டு.
14. கடந்த 2007ஆம் ஆண்டு, தென்னிந்திய ஃப்லிம்ஃபேர் விருதுகளில் `சிறந்த நடிகை’ என்ற விருதே நயன்தாரா சினிமாவுக்காகப் பெற்ற முதல் விருது.
15. `சிறந்த நடிகை’ பட்டியலுக்கான SIIMA விருதுகளை சமீபத்தில் பெற்றார் நயன்தாரா.