13 Years of Ayan : பளபளக்குற பகலா நீ.. வெளியாகி 13 ஆண்டுகள்... ட்விட்டரில் கொண்டாடப்படும் அயன்..
15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான அயன் திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடிக்கு வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.
சூர்யா மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அயன்’. விறுப்பான காட்சிகளுடன் , சுவாரஸ்ய கதைக்களத்துடன் உருவான இந்த படத்தை மறைந்த இயக்குநர் ’கே.வி ஆனந்த்’ இயக்கியிருந்தார். படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் , கிட்டத்தட்ட 80 கோடிக்கு வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அயன் படம் போன்று மற்றொரு படம் வராதா என்ற ஏக்கம் சினிமா ரசிகர்களிடையே இன்றுவரை நிலவி வருகிறது. ஒரு சில படங்களே அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமையும். அப்படிப்பட்ட படங்களில் சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படத்திற்கு ஒரு இடமும் உண்டு.
இந்தநிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் 13ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் தற்போது ட்விட்டர் பக்கத்தில் #13YearsofAyan என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
• 13 Years Of All Time Blockbuster #Ayan 💥
— Bɪʙɪɴ Sғᴄ 彡 (@BibiN_SFc_) April 3, 2022
History Of Records !! #13yearsOfAyan@Suriya_offl @tamannaahspeaks pic.twitter.com/uTCylNB2OF
13 Years Of All Time Blockbuster #Ayan 💥
— AYAN ANIRUDH 🗡️🔥 (@AyanOffl) April 3, 2022
History Of Records !! #13yearsOfAyan @Suriya_offl #EtharkkumThunindhavan #VaadiVaasal #Suriya41 pic.twitter.com/4tDUHTAmP2
அன்றைய நாளில் அயன் திரைப்படம் படைத்த சாதனைகள் :
- 2009 இல் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம்
- ரஜினி, கமல் படங்கள் வரிசையில் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம்
- தமிழ்நாட்டில் மட்டும் 201 நாட்கள் ஓடிய திரைப்படம்
- தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திரா, கேரளாவில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம்
- மலேசியாவில் முதல் மில்லியன் டாலர் வசூல் சாதனை படைத்த சூர்யா திரைப்படம்
- ஆந்திராவில் அதிக வசூல் செய்த 5வது தமிழ் டப்பிங் திரைப்படம்
- சென்னை சத்யம் சினிமாக்கள் இதுவரை பதிவு செய்யப்படாத வசூல் சாதனைகளில் அயன் முதலிடத்தில் உள்ளது
- அயன் திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் சுமார் 4 முறை அதிக லாபத்தை பெற்று தந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்