Drug Case: போதைக்கு அடிமையான 3 எழுத்து ஹீரோ! விசாரணை வளையத்துக்குள் வந்த 2 ஹீரோயின்கள்! பகீர் தகவல்!
போதை பொருள் வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த தகவலின் படி 10 பிரபலங்கள் விசாரணை வளையத்துக்குள் வர உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் பிரச்சனையில் ஈடுபட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து, ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் என்பவரின் செல்போன் எண் உட்பட, நடிகர் ஸ்ரீகாந்த் செல்போன் எண்ணும் கிடைத்தது.
இதை தொடர்ந்து, பிரசாந்த் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில்... பிரதீப்பிடம் இருந்து கொக்கேன் போதை பொருள் வாங்கி, நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இது குறித்து நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீசார் விசாரணையை துவங்கிய நிலையில், அவரிடம் இருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, போதைப்பொருள் பயன்படுத்தினாரா? இல்லையா? என்பதை உறுதி செய்தனர். இந்த ரத்த பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

நடிகர் ஸ்ரீகாந்தை வரும் 7-ஆம் தேதி முதல் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. "விசாரணையில் போது ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தில், பட அதிபர் பிரசாந்துடன் தனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது? போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் எப்படி ஏற்பட்டது என பல தகவலைகளை கூறியுள்ளார்.
அதாவது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்தை ஹீரோவாக வைத்து'தீக்கிரை' என்கிற படத்தை தயாரித்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் பழக்க வழக்கம் ஏற்பட்டது. பிரசாந்த், ஸ்ரீகாந்துக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தில் இருந்து பத்து லட்சம் கொடுக்க வேண்டி இருந்த நிலையில், அந்த பணத்தை கேட்ட போதெல்லாம் அதற்கு பதிலாக கொக்கேன் போதை பொருளை கொடுத்து சமாளித்துளளார். கடைசியாக பிரசாத் கைது செய்யப்படுவதற்கு முன்பு 250 கிராம் கொக்கேனை தன்னிடம் கொடுத்ததாக கூறியுள்ள பிரசாந்தை, அதை வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் பார்ட்டி செய்ததாக தெரிவித்துள்ளார். அதே நேரம் யாருக்கும் நான் போதைப் பொருள் விற்கவில்லை என்றும் வீட்டில் வைத்து தான் பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் போதைப்பொருள் மோகத்தில் இருக்கும் பிரபலங்கள் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் இடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே கிருஷ்ணாவின் பெயரை ஸ்ரீகாந்த் கூறியதை தொடர்ந்து, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முயன்ற நிலையில்... அவர் தலைமறைவாகியுள்ளார். எனவே அவரை பிடிக்க 5 தனி படை அமைக்கப்பட்டு தமிழக போலீசார் கேரளா விரைந்துள்ளனர்
இவரை தவிர இந்த போதைப்பொருள் பயன்படுத்தும் பட்டியலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 பிரபலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மூன்று எழுத்து பெயர் கொண்ட முன்னணி நடிகர் ஒருவர் தான் நடத்தும் விருந்தினர் நிகழ்ச்சிகளில் போதை பொருளை வழங்கி வருவதாக கூறியுள்ளார். மேலும் 2 முன்னணி நடிகர்களும் இந்த லிஸ்டில் உள்ளார்களாம். நடிகர்கள் மட்டும் இன்றி ஒரு சில முன்னணி நடிகைகளும் போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்களாம். அதே போல் இளம் இசையமைப்பாளர் ஒரு போதை பொருளை இழுக்காமல் தூங்கவே மாட்டாராம். இப்படி 10 பிரபலங்கள் போதை தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளதாகவும் அவர்களிடம் கூடிய விரைவில் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.





















