மேலும் அறிய

Pollachi Dmk Candidate: பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி - பின்னணி என்ன?

Pollachi DMK Candidate Eswarasamy: பொள்ளாச்சி தொகுதியில் மடத்துக்குளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார். ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கு.சண்முகசுந்தரத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Pollachi Lok Sabha Constutiency DMK Candidate Eswarasamy: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி பொள்ளாச்சி தொகுதியில் மடத்துக்குளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார். ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கு.சண்முகசுந்தரத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஈஸ்வரசாமி?

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி ஊராட்சி கருப்புசாமி புதுார் என்ற சிறிய கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த கருப்புசாமி, வேலாத்தாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக 20.04.1976 ம் ஆண்டு கே.ஈஸ்வர சாமி பிறந்தார் இவரது மனைவி லதாபிரியா. இவர்களுடைய மகள் ஹரிவர்ஷா சென்னை மருத்துவக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கருப்புசாமி புதுார் தொடக்கபள்ளியில் ஆரம்ப கல்வியையும், மடத்துக்குளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உயர் கல்வியும் படித்தவர். பள்ளி இறுதி படிப்போடு நூற்பாலையில் பணியில் சேர்ந்து மிகச்சிறப்பாக பணியாற்றி 1995 ம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து சுபம் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை துவங்கி பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை தொழிலில் ஈடுபட்டார்.

தொழில் நிர்வாகத் திறமை காரணமாக 2001 ம் ஆண்டு டி.வி.எஸ் நிறுவனத்தின் மடத்துக்குளம் பகுதியின் வாகன விற்பனை நிலையத்தை எடுத்து லாபகரமாக நடத்தி காட்டினார். இவரின் நிர்வாகத்திறனை கண்ட டி.வி.எஸ் நிறுவனம் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் நலிவடைந்த நிலையில் இருந்த டி.வி.எஸ் விற்பனை நிலையத்தை அவரிடம் வழங்கியது. தனது நிர்வாக திறமையால் ஒரே ஆண்டில் அந்த நிறுவனத்தை விற்பனையில் தமிழக அளவில் ஏழாம் இடத்திற்கு உயர்த்தி காட்டினார். இவருடைய திறமையை கண்டு வியந்த நிறுவனம் பழனியில் முதன்மை விற்பளையாராக அவரை நியமித்தது. இந்த நிறுவனத்தின் விற்பனை ஏஜென்சியாக ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தயம், கொடைக்கானல், தொப்பம்பட்டி, வத்தலகுண்டுநிலக்கோட்டை போன்ற வட்டங்களில் தனது நிறுவனத்தை விரிவு படுத்தி மிகச்சிறப்பான முறையில் தொழில் செய்து வருகிறார்.

மேலும் 2006 ம் ஆண்டு முதல் மடத்துக்குளம் பகுதியில் சூர்யா புளுமெட்டல்ஸ், ஹரிவர்ஸா புளுமெட்டல், ஹரிவர்ஸா எம்.சாண்ட், பாவாத்தாள் நூற்பாலை போன்ற தொழில் நிறுவனங்களை தொடங்கி அதன் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று சுமார் 500 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். மேலும் 2008 ம் ஆண்டு ஈரோடு பாரதியார் கலாச்சார அகாடமி சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கலாம் அவர்களின் கரங்களால் இளம் தொழில் சாதனையாளர் என்ற விருதினை பெற்று வருங்கால இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார். மேலும் மடத்துக்குளம் வட்டம் கணியூரில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் கே.சி.எஸ். பாபு அய்யர் அவர்கள் வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து பள்ளியை நடத்த இயலாத நிலையில் அப்பள்ளி நிர்வாகத்தை ஈஸ்வரசாமி அவர்களுக்கு 2019 ம் ஆண்டு ஒப்படைத்தார். இவருடைய திறம்பட்ட நிர்வாகத்தால் இப்பள்ளியில் இன்று ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் நகர பள்ளிகளுக்கு இணையான தரமான கல்வியை பெற்று வருகின்றனர்.


Pollachi Dmk Candidate: பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி - பின்னணி என்ன?

மேலும் அகில உலக அரிமா சங்கத்தின் மடத்துக்குளம் தலைவர் வட்டார தலைவர், மண்டல தலைவர் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்து, 2012 ம் ஆண்டு மண்டல தலைவராக இருந்த போது மடத்துக்குளத்தில் மண்டல மாநாடு நடத்தி உடுமலை தொழிலதிபர் கெங்குசாமிநாயுடு அவர்களின் திருக்கரங்களால் பாராட்டு பெற்றார். அரிமா 324 பி.1 மாவட்டம் நடத்திய மாநாட்டில் மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் நடந்த கருத்தரங்கங்களில் பங்கேற்று பேசி நிர்வாகத்திறனுக்கான விருது பெற்றவர். மேலும் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் சார்பில் சுவிர்சர்லாந்து, துபாய், துருக்கி, இலங்கை ஆகிய நாடுகளில் நடந்த உலகளாவிய விற்பனையாளர்கள் சந்திப்பு மாநாடுகளில் பங்கேற்று பாராட்டு பெற்றவர்.

கட்சி பணிகள்

2007 ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் கருப்புசாமி புதுார் கிளைக்கழகத்தின் ஒன்றிய பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார். பின்பு 2014 ம் ஆண்டு 14 வது கழக அமைப்பு தேர்தலில் ஒன்றிய பொருளாளராக பொறுப்பேற்றார். மேலும் 2016 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்ககுழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட போது நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு 2019 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சி ஒனறியக்குழு உறுப்பினராய் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் இவரது மனைவி லதா பிரியா ஈஸ்வரசாமி 2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வருகிறார்.

மேலும் 2020 ஆண்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக பெறுப்பாளராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். தொடந்து 2022 ம் ஆண்டு கழகத்தின 15 வது அமைப்பு தேர்தலில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று இன்று வரை களப்பணியாற்றி வருகிறார். கழகத்தின் சார்பாக தலைமை கழகம் இதுவரை அறிவித்த அனைத்து போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார். ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றது முதல் மடத்துக்குளம் ஒன்றியத்தில் இளைஞர் அணி மகளிர் அணி ஆதிதிராவிடர் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து கழகத்திற்கு வலுசேர்த்து மிகச்சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். தற்போது மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளிலும் சுமார் 15 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொது மக்களின் பாராட்டை பெற்றவர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.