சசிகலாவை அதிமுகவிற்கு தலைமை ஏற்க அழைக்கும் போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு
சின்னம்மா உங்கள் வார்த்தைக்காக கோடிக்கணக்கான அதிமுகவினர் காத்திருக்கிறோம்...! - என்றும் கழகப்பணியில் மதுரை முனிஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள் தி.மு.க., 67 வார்டுகள் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 இடத்திலும், வி.சி.க ஒரு இடத்திலும், சி.பி.எம் 4 இடத்திலும், ம.தி.மு.க 3 இடத்திலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதே போல் அ.தி.மு.க 15 இடத்திலும், பா.ஜ.க ஒரு இடத்திலும், சுயேட்சை 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
#Abpnadu | தோற்றது போதும் எம்.ஜி.ஆர், அம்மா கட்டிகாத்த அதிமுகவிற்கு தலைமை ஏற்க வாருங்கள் சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து அதிமுகவினரால் மதுரையில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு.#Admk | #sasikala | #madurai | #poster | #election | @reportervignesh | . . . . . pic.twitter.com/I9ZkA9KJEG
— Arunchinna (@iamarunchinna) February 24, 2022