![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vikravandi Election Result:விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் முடிவுகள் இன்று:கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 பாயிண்ட்..!
Vikravandi By Election Result: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
![Vikravandi Election Result:விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் முடிவுகள் இன்று:கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 பாயிண்ட்..! Vikravandi By Election Result today july 13 important information need to know who will win Vikravandi Election Result:விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் முடிவுகள் இன்று:கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 பாயிண்ட்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/13/bad65e3810b5ced3c503cc4a2c6b58ec1720811285792572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Vikravandi By Election Result: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பிற மாநிலங்களைச் சேர்த்து 13 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை எப்போது நடைபெறும் என்றும் முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டிய தகவல் குறித்தும் இங்கே காண்போம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் , ஜூலை 13 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் :
இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
வேட்பாளர்கள்: பாமக, திமுக, நாதக
வாக்காளர்கள்:
விக்கிரவாண்டி தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவிகித வாக்குகள் பதிவாகியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கவனிக்க வேண்டியவை:
- வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
- தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்குதான், வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
- வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சல் வாக்குகளுக்காக 2 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும்
- வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்குகள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்.
முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி:
இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முக்கிய கட்சியான அதிமுக போட்டியிடாததால், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என கவனம் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை 8 தொடங்கும் நிலையில் முடிவுகளானது, இன்று காலை 11 மணிக்கு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள், பி.எஸ்.பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட விவகாரங்கள் சமீபத்தில் நிகழ்ந்தது. இந்நிலையில் வெற்றி, ஆளும் கட்சியான திமுக பக்கமா அல்லது இதர கட்சிகளின் பக்கமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி, பீகார் ( 1), இமாச்சல் பிரதேசம் (3), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் ( 2 ), மேற்கு வங்காளம் ( 4) ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகள் என மொத்தம் 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடுவின் வலைதளம், X தளம் , இன்ஸ்டாகிராம் , யூடியூப் உள்ளிட்ட பக்கங்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
வலைதள பக்கம் ABP NADU
யூடியூப் பக்கம் YOUTUBE
X பக்கம் X
இன்ஸ்டாகிரம் Instagram
ஃபேஸ்புக் ABP Nadu | Facebook
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)