(Source: ECI/ABP News/ABP Majha)
வாக்காளர்களுக்கு கொடுக்க ரெடியா இருந்த வேட்டி, சேலைகள்.. கண்டுபிடித்த பாமக - விக்கிரவாண்டியில் பரபரப்பு
திமுக கிளைச்செயலாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்ட்டிருந்த வேட்டி சேலைகள் மற்றும் சட்டைகளை பாமகவினர் பறிமுதல் செய்து சாலை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
விழுப்புரம்: விக்கிரவண்டி அருகேயுள்ள ஆசாரங்குப்பத்தில் திமுக கிளைச்செயலாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் மற்றும் சட்டைகளை பாமகவினர் பறிமுதல் செய்து சாலை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளராக உள்ள ராமலிங்கம் என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வேட்டி சட்டை, சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாமகவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பாமகவினர், ராமலிங்கம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டி, சேலை, சட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வேட்டி சேலைகளை திமுகவினரின் வீட்டின் வாயிலையே சாலையில் கொட்டினர்.
பறிமுதல் செய்யப்பட்ட வேட்டி சேலைகள தொடர்பாக காவல்துறைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தகவல் அளித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் வருகை புரிய நேரமாகியதால் சாலையில் கொட்டிய வேட்டி சேலைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவரக்ளுடன் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் பாண்டியன் இருவரும் பாமகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கைவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட வேட்டி சேலை, சட்டை ஆகியவை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.