மேலும் அறிய

Urban Local Body Election 2022 | "கோவையின் மானப் பிரச்சனை.. தேர்தலில் மக்கள் சரியான முடிவெடுப்பார்கள்" - வானதி சீனிவாசன்

"வீட்டிற்குள் வந்து பணம், கொலுசு போட்டுவிட்டு வாக்கு கேட்கும் மோசமான சூழல் உள்ளது. இதனைத் தாண்டி நல்லவர்களுக்கும், தூய்மையானவர்களுக்கும் வாக்களிப்பது சவாலாக உள்ளது"

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 68 வது வார்டான டாடாபாத் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுணுமா என பலர் நினைப்பார்கள். எந்த இடத்திலும், நேரத்திலும் ஜனநாயக கடமை நிறைவேற்ற வேண்டும். நமக்கான பணி செய்யக் கூடியவர்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். 

Urban Local Body Election 2022 |

கோவை  தமிழக அரசியலின் மிக முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. அத்துமீறல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் வந்து பணம், கொலுசு போட்டு விட்டு வாக்கு கேட்கும் மோசமான சூழல் உள்ளது. இதனைத் தாண்டி நல்லவர்களுக்கும், தூய்மையானவர்களுக்கும் வாக்களிப்பது சவாலாக உள்ளது. வாக்காளர்கள், பிரச்சாரத்திற்கு சென்றவர்கள் மிரட்டப்படுகின்றனர். இதனைக் கண்டித்து போரட்டங்கள் நடந்தன. கோவையின் மானப் பிரச்சனையாக இந்த தேர்தல் மாறியிருக்கிறது. மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள். ராமநாதபுரம் பகுதியில் ஒரு மண்டபத்திற்குள் ஹாட் பாக்ஸ் கொடுத்து வாக்கு கேட்டு வருகின்றனர். அத்துமீறல்களை தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தனையும் தாண்டி ஜனநாயகம் பெற்றி பெற வேண்டும்.
தேர்தல் நியாயமா நடக்கிறதா என்பது சந்தேகமகா உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் சரியான ஏற்பாட்டுடன் நடத்தவில்லை. வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தவில்லை” என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் தனது காரில் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது காரில் கட்சிக் கொடி இருந்ததால், தேர்தல் விதிமுறை மீறல் எனக்கூறி, திமுகவினர் வீடியோ எடுத்தனர். வீடியோ எடுக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

கோவை மாவட்டத்தில் இன்று ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 802 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 23 இலட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க உள்ளனர். 2303 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 424 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. காலை முதல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 

காலை 9 மணி நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 8.60 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கோவை மாநகராட்சியில் 6.79 சதவீதமும், 7 நகராட்சிகளில் 10.38 சதவீதமும், 33 பேரூராட்சிகளில் 13.42 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. கோவையில் நகரப்பகுதிகளை விட பேரூராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget