UP Election Result 2022: அம்மாடியோவ்!! இவ்வளவு வித்தியாசமா? அசத்தலாக வெற்றிபெற்ற வேட்பாளர்!
பங்கஜ் சிங் 2,44,091 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர் சுனில் சவுத்ரி 62,722 வாக்குகளும் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தனர்.
நொய்டா தொகுதியில் பாஜக தலைவர் பங்கஜ் சிங் 1,81,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சட்டமன்ற வரலாற்றில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். பதிவான வாக்குகளில் 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில், நொய்டாவில் விதான் சபா தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் சாதனை வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பாஜக வேட்பாளர் பங்கஜ் சிங் 1,81,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இது இதுவரை நடந்த சட்டசபை தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அவர் 2,44,091 வாக்குகள் பெற்ற நிலையில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுனில் சவுத்ரி 62,722 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கிருபா ராம் சர்மா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இதற்கு முன், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர மாநில-சட்டமன்றத் தேர்தலில், என்சிபி தலைவர் அஜித் பவார் 1.65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை தோற்கடித்து, சட்டமன்றத் தேர்தல்களில் புதிய சாதனையைப் படைத்திருந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் நொய்டா விதான் சபா தொகுதியில் போட்டியிட்ட எம்எல்ஏ பங்கஜ் சிங், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்தார்.
பதிவான வாக்குகளில் பங்கஜ் சிங் 70.17% வாக்குகளையும், சுனில் சவுத்ரி மற்றும் கிருபா ராம் சர்மா முறையே 18% மற்றும் 4.68% வாக்குகளையும் பெற்றனர்.
பங்கஜ் சிங், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் ஆவர். 2017 உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் நொய்டா விதான் சபா தொகுதிக்கு பங்கஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் துணைத் தலைவராக உள்ள இவர், 2002ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்