மேலும் அறிய

Trichy Constituency Lok Sabha Election Results 2024 : திருச்சியில் பரபரப்பு... வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு - அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதம்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் போது 14ம் நம்பர் மேஜையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இன்வெலிட் எரர்- முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்...

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 124 சுற்றுகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 1,627 போ் ஈடுபடுகின்றனா். மூன்றடுக்கு பாதுகாப்பில் மத்திய, மாநில போலீஸாா், துணை ராணுவப் படையினா் என 1500-க்கும் மேற்பட்டோா் பணியில் உள்ளனா்.

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜமால் முகமது கல்லூரியில் 3 அடுக்குப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணியில் 117 நுண் பாா்வையாளா்கள், 116 மேற்பாா்வையாளா்கள், 130 உதவியாளா்கள், 1,251 முகவா்கள் ஈடுபடுகின்றனா். இவா்கள் தவிர அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிக்காக 13 கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Trichy Constituency Lok Sabha Election Results 2024 : திருச்சியில் பரபரப்பு... வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு - அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதம்

மேலும், 6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவான 10 லட்சத்து 49 ஆயிரத்து 93 வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் 8,658 சோ்த்து மொத்தம் 10,57,751 வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 25 சுற்று, திருச்சி மேற்கு 20, திருச்சி கிழக்கு 19, திருவெறும்பூா் 22, கந்தா்வக்கோட்டை 18, புதுக்கோட்டை 19, தபால் வாக்குகளுக்கு ஒரு சுற்று என மொத்தம் 124 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தற்போது காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்னா், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த பேரவைத் தொகுதி வாரியாக நடைபெறும்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அவசர ஊா்தியுடன், மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனா். காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Trichy Constituency Lok Sabha Election Results 2024 : திருச்சியில் பரபரப்பு... வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு - அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதம்

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகளைக் கண்காணிக்க 3 பேரவைத் தொகுதிகளுக்கு தலா ஒரு பாா்வையாளரை இந்தியத் தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதன்படி ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பாா்வையாளராக தினேஷ்குமாரும், திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்கு ராஜீவ் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்ன பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் என்னும் பணி தொடங்கிய போது, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மின்னணு வாக்கு எண்ணிக்கையில், 14 ம் நம்பர் மேஜையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் "இன்வேலிட் எரர்" என்று காண்பிப்பதால் முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
NEET Protest : நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்Dad Beaten by Son | தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் பதற வைக்கும் காட்சி! நடந்தது என்ன?Bird Flu | பரவியதா பறவை காய்ச்சல் கொத்து,கொத்தாக மடியும் காகங்கள் அதிர்ச்சி காட்சிகள்!SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பா..? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!
NEET Protest : நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
12th Revaluation Result 2024: வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
Online Delivery Cobra: மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
Rahul Gandhi: காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
“படுத்திருந்தவர் மீது கார் ஏற்றினாரா எம்.பி-யின் மகள்?” கைது செய்த சென்னை காவல்துறை – பரபரப்பு சம்பவம்..!
“படுத்திருந்தவர் மீது கார் ஏற்றினாரா எம்.பி-யின் மகள்?” கைது செய்த சென்னை காவல்துறை – பரபரப்பு சம்பவம்..!
Embed widget