தேனி தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள்; வாக்குச்சாவடி மையத்தில் வைத்து சீல் வைப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
18 வது நாடாளுமன்ற தேர்தலானது தமிழகம் முழுவதும் நேற்று காலை 7 மணிமுதல் தொடங்கி மாலை 6 மணி வரையில் தீவிரமாக நடைபெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என தங்கள் ஜன நாயக கடமையை மிகுந்த ஆர்வத்துடன் செய்தனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
தேனி மாவட்டத்தில் முக்கிய பிரபலமான முன்னாள் முதல்வருமான அதிமுகவுடைய ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் எம்பி ரவிந்திர நாத் தங்களது குடும்பத்தார்களுடன் தங்களது சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதேபோல் தேனி பாராளுமன்றத்தில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள தங்க தமிழ்செல்வன் அவரது சொந்த ஊரானநாராயணத்தேவன் பட்டியில் தனது வாக்கினை செலுத்தினார். தேனி பாராளுமன்றத்தை பொறுத்தவரைக்கும் ஆண், பெண் மற்றும்மூன்றாம் பாலினத்தவர் என சுமார் 1620419 வாக்காளர்கள் உள்ளனர். தேனி பாராளுமன்ற தொகுதியானது தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் என 4 சட்டமன்ற தொகுதியையும். மதுரை மாவட்டத்தை உள்ளடக்கிய உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதியை அடக்கிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது.
தேனி பாராளுமன்றதேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்கள் மொத்தம் 1788 வாக்கு பதிவுமையங்கள் அமைக்கப்பட்டு வாக்கு பதிவானது நடைபெற்றது. தேனி பராளுமன்ற தேர்தலில் நடந்த வாக்குப்பதிவானது 64.72% பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
The Longest Wait - நீண்ட கால காத்திருப்பு தொடங்கியது - 45 நாள் காவல் பணியைத் தொடங்கிய கட்சிகள்
சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷஜீவனா தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் முன்னிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து துணை ராணுவம், போலீசார் என வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள தேனி கம்மவார் கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.