மேலும் அறிய
Advertisement
அரூர் பேரூராட்சியில் மனைவி தலைவர், கணவன் துணைத் தலைவர் : திமுக தம்பதியர் வெற்றி
அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவியில் வெற்றிப் பெற்றுள்ள சூர்யா து.தனபால், இந்திராணி ஆகியோர் தம்பதியர்
தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி பதவியேற்றனர். இன்று நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த தம்பதியர் வெற்றி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின் தலைவர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுக }7, அதிமுக}7, பாமக}2, சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையெடுத்து, இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் இந்திராணி 12 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் த.நிவேதா 6 வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். இதேபோல், அரூர் பேரூராட்சியின் துணைத் தலைவராக திமுக வேட்பாளர் சூர்யா து.தனபால் வெற்றி பெற்றார். அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவியில் வெற்றிப் பெற்றுள்ள சூர்யா து.தனபால், இந்திராணி ஆகியோர் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் ஆகியோரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதில், முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலர் எஸ்.ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் முல்லைரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரூர் பேரூராட்சியின் தலைவர் இந்திராணி, துணைத் தலைவர் சூர்யா து. தனபால் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கலைராணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion