Thanga Tamil Selvan: தேனியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் தங்க தமிழ்செல்வன் - தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?
Theni DMK Candidate Thanga Tamil Selvan: பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக தேனியில் போட்டியிட தேனி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் தங்க தமிழ்செல்வனுக்கு சீட் அறிவிப்பு.
தேனி பாராளுமன்றம் திமுக வேட்பாளர்:
வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேதி அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி கட்சிகளை தேர்ந்தெடுப்பது, எத்தனை இடங்களில் போட்டியிடுவது, யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் தேனி மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் திமுக கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்ட தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் தங்க தமிழ்செல்வனுக்கு தேர்தலில் போட்டியிட நிறுத்தப்பட்டுள்ளார்.
CM MK Stalin: "மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல" முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
அரசியல் வாழ்க்கை:
தங்க தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அதிமுக சார்பில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு 2001- 2011, 2016 ஆண்டுகளில் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் அப்போதைய நிலையில் ஜெ. ஜெயலலிதா போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா போட்டியிட வசதியாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதன்பிறகு இவர் பாராளுமன்றத்திற்கு ராஜ்ய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்ற பிறகு டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
Gautham Menon: "மணிரத்னம் ஆஃபிஸ் முன்னாடி 2 வருஷம் வெயிட் பண்ணேன்" மனம் திறந்த கௌதம் மேனன்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றதோடு, தினகரனுக்கு விசுவாசமாகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் சபாநாயகர் ப. தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தியப் பொதுத் தேர்தல், 2019இல் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமமுகவில் இருந்து விலகி 2019 ஜூன் மாதம் அன்று திமுகவில் இணைந்தார். 2021 தேர்தலில் அப்போதய துணை முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியற்றார். அதேபோல ஓபிஎஸ் மகன் ஓ.ரவீந்திரனாத்திற்கும் எதிராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தற்போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.