மேலும் அறிய

CM MK Stalin: "மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல" முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

Lok Sabha Elections: மோடியின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீது கொண்ட அக்கறையால் பாஜக ஆட்சியை அகற்ற இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வெளியான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்:

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை என அனைத்து கட்சிகளும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

இப்படியான நிலையில் திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பாக ஒரு அறிக்கை தயாரித்து பொறுப்புக்கு வந்த பிறகு அதை முழுமையாக நிறைவேற்றி காட்டுவது தான் திமுக. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடிவு செய்து கனிமொழி எம்.பி., தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. 

மோடி ஆட்சி தொடர்வது நல்லதல்ல:

இது திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, தமிழ்நாடு மக்களின் தேர்தல் அறிக்கையாகும். 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தி விட்டது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. இந்தியாவின் கட்டமைப்பை சிதைத்து விட்டார்கள். கையில் கிடைத்த அதிகாரத்தை வீணடித்து விட்டார்கள் என்பது தான் உண்மை. இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டின் மீது கொண்ட அக்கறையால் பாஜக ஆட்சியை அகற்ற இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவில் அமையக்கூடிய புதிய ஆட்சியானது இந்தியாவினுடைய கூட்டணி ஆட்சித்தன்மையை மதிக்கக்கூடியதாகவும், மாநில நலனை அரவணைத்து செயல்பட கூடியதாக அமைய வேண்டும். சமத்துவம், சமதர்மம் எண்ணம் கொண்ட ஆட்சியாக அமைய வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 21 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

 மேலும் படிக்க: அதே வேட்பாளர்கள்: திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்- புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
Embed widget