Lok Sabha Election 2024: "இரட்டை இலைக்கு வாக்களிப்பது மோடிக்கு வாக்களிப்பதற்கு சமம்" சேலம் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி பரப்புரை
இரட்டை இலைக்கு வாக்களிப்பது மோடிக்கு வாக்களிப்பதற்கு சமம் என்று சேலம் தி.மு.க. வேட்பாளர் பரப்புரையில் பேசினார்.
தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் பரப்புரை:
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை, பட்டைகோவில், கிச்சிபாளையம், குமரி கிரி, சன்னியாசி குண்டு, எருமாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற திமுக அலுவலகம் திறந்து வைத்து பின்னர் அப்பகுதி மக்களிடத்தில் உதயசூரியன் சின்னத்தில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை:
பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய திமுக வேட்பாளர் செல்வகணபதி, "நாடாளுமன்றத் தேர்தல் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான தேர்தல் பாஜக ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வந்தது. மோடியின் பத்தாண்டு கால ஆட்சி இந்தியாவின் இருண்ட காலமான ஆட்சியாக இருந்தது. விலைவாசி உயர்வு பொருளாதார வளர்ச்சி படும் பாதாளத்திற்கு சென்றது மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்ற ஆட்சி தான் இந்த பாஜக ஆட்சி. ஆளுநர் ரவி போன்றவர்களை நியமித்து வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த ஆட்சி தான்.
இந்த பாஜக ஆட்சி அரசியல் அமைப்பு சட்டத்தை துளி அளவு கூட தெரியாதவர். தமிழகத்தின் ஆளுநராக உள்ளார். தமிழகத்தில் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை வேண்டுமென்று, சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி அதை ஆளுநரிடம் கொண்டு சென்றால் ஆளுநர் அதற்கு கையெழுத்து இடாமல் மாறாக சூதாட்டத்தை நடத்தும் ஓனர்களை அழைத்து ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்திய நிகழ்வு அரங்கேறியது என்றார்.
மோடிக்கு வாக்களிப்பதற்கு சமம்:
அப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சி இந்த பாஜக ஆட்சி என்று மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள். மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் வேளையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அவர்களின் சித்தாந்தம் தமிழகத்தில் எடுபடவில்லை. ஆகவே தான் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றால் இதற்கெல்லாம் கைகட்டி வாய் பொத்தி இருந்தவர்கள் தான் அதிமுகவினர் இன்றைக்கு ஏதோ ஒரு மறைமுக கல்ல கூட்டணியை தனித்தனியாக வருவது போல் வந்து கொண்டு இருக்கின்றனர். நேற்று வரை ஆதரித்தவர்கள் ஏன் தனியாக போட்டியிடுகின்றனர் என்பதற்கான காரணமும் சொல்லவில்லை விளக்கமும் சொல்லவில்லை என்றார். அந்தக் கூட்டணிக்கு நாம் யார் வாக்களித்தாலும், தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம் என்று தான் நாம் பார்க்கிறோம்.
காரணம் அதிமுகவிற்கு நாம் போடுகின்ற ஓட்டு நேரடியாக மோடிக்கு வாக்களிப்பதற்கு சமம். அதிமுகவிற்கு பலனை அளித்தால் அது மோடிக்கு ஆதரவாக தான் போகும். காரணம் அதிமுகவிற்கு கூட்டணியே கிடையாது இரட்டை இலைக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கு அது மோடிக்கு செல்கின்ற வாக்காகத்தான் இருக்கும் என்றார். நேற்று வரை பாஜகவிற்கு மோடிக்கும் எதிராக இருந்த பாமகவினரும் தற்பொழுது மோடிக்கு எத்தனை மார்க் போடலாம் என்று கேட்டதற்கு பூஜ்ஜியத்திற்கும் கீழ் என்று சொன்ன ராமதாஸ் மதிப்பெண் இருந்தால் போடலாம் என்று மோடியை விமர்சித்தவர். இன்றைக்கு அவரைக் கட்டித் தழுவுகிறார். இந்த சந்தர்ப்பவாதிகளை எண்ணிப் பார்த்து நிராகரிக்க வேண்டும் என்று பேசினார்.