Urban Local Body Election: திமுகவின் சிறந்த திட்டம் 'மொட்டைக்கு இல்லை கட்டணம்" என்ற திட்டம்தான்"- ஓ.எஸ்.மணியன்
திமுக அறிவித்த திட்டங்களிலேயே சிறந்த திட்டம் 'மொட்டைக்கு இல்லை கட்டணம்" என்ற திட்டம்தான்"- என மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் என்ற தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல கட்சிகளில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் இரு தினங்களே உள்ள சூழலில் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக கட்சியினர் வேட்பாளர்களை இறுதி செய்து நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை பெறவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சோழம் பேட்டையில் அமுமுக உள்ளிட்ட பல மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதிமுக மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார்.
Rahul Gandhi | ''ராகுல் ஜி.. யோசிச்சு பேசுங்க.. கொஞ்சம் வளருங்க'' - ராகுலுக்கு குஷ்புவின் ரிப்ளை!
இதில், தமிழ்நாடு முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்று சிறப்புரையாற்றி, மாற்றுக்கட்சியினருக்கு சேலை மற்றும் துண்டு வழங்கி அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அவர் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் எதைச் சொல்லி ஓட்டு கேட்பது என்றே தெரியவில்லை. அனைத்தையுமே கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே சொல்லி விட்டதால் தற்போது எதை சொல்லி ஓட்டு கேட்பது என்று விழிக்கிறார்.
அதிமுகவில் வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால், திமுகவில் இதுவரை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாமல் அடிதடி பிரச்னையாக உள்ளது. திமுக தலைவர் குடும்பத்தில் அப்பா, பாட்டான், பிள்ளை, பேரன், பேத்தி என சீட்டு கொடுப்பார்கள், அது போன்று இப்போது நகரமன்ற தேர்தலிலும் திமுகவில் ஒரே குடும்பத்தில் பலருக்கு சீட்டு வழங்கப்படுகிறது. திமுகவில் அறிவிக்கப்பட்ட சிறப்பான திட்டம் "மொட்டைக்கு இல்லை கட்டணம்" என்ற திட்டம் மட்டுமே. கடைக்கு சென்று மொட்டை அடித்தால் காசு தரவேண்டும். ஆனால், கோயிலுக்கு சென்று மொட்டை அடித்தால் கட்டணம் தர வேண்டாம் என்பதுதான் திமுகவின் சிறப்பான திட்டம் என்றார். இக்கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.