Watch Video: ஒட்டகத்தின் மீது வந்து மனுத்தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் - மகாராஷ்ட்ராவில் சுவாரஸ்யம்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய ஒட்டகத்தில் சென்றது பெரும் கவனத்தை ஈர்த்தது.
மகாராஷ்டிரா சுயேட்சை வேட்பாளர் மக்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மிகவும் பரபரப்பான தெருக்களில் ஒட்டகத்தை ஓட்டிச் சென்றார்.
மகாரஷ்டிரா மக்களவை தேர்தல்:
சுமார் 30 லட்சம் வாக்காளர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஔரங்காபாத் தொகுதிக்கு மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் சேர்ந்த வேட்பாளர், மக்களவை தேர்தலில் தனது வேட்புமனுவை பதிவு செய்ய தனித்துவமான முறையை கையாண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான சாஹேப் கான் பதான், செவ்வாய்க்கிழமை ஒட்டகத்தின் மீது சவாரி செய்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
மிகவும் பரபரப்பாக இயங்கும் நகரின் தெருவில் சென்றது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பலர், ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் வேட்பாளரின் பின்னால் ஆதரவாளர்கள் கூட்டத்துடன் பேரணி சென்றனர். அப்போது ஒட்டகத்தில் செல்லும் போது வெற்றி அடையாளத்தைக் காட்டும் வகையில் கேமராவுக்கு போஸ் கொடுத்தார்.
#WATCH | Chhatrapati Sambhajinagar, Maharashtra: Independent candidate from Aurangabad Lok Sabha Saheb Khan Pathan went to file his nomination riding a camel. pic.twitter.com/SMZcfIjWlA
— ANI (@ANI) April 24, 2024
வேட்புமனு தாக்கலின் போது அவர் தெரிவித்ததாவது, நான் வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்தபோது, சிலர் என் மீது பொய்யான எப்ஐஆர் பதிவு செய்தனர். மக்கள் என்னை நேசிக்கிறார்கள், நான் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் என்னிடம் கூறினார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், ஒட்டகத்தில் சென்று வேட்புமனுதாக்கல் செய்யும் வீடியோவை, பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.