மேலும் அறிய

நான்கு முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் தூத்துக்குடி! வெற்றிக்காக தீவிர பரப்புரையில் கட்சிகள்!

முன்னாள் ஆளுநர் தமிழிசை, கனிமொழி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தூத்துக்குடி மிகவும் பிரபலம் ஆனார்.

முதல்வரின் தங்கை முன்னாள் முதல்வரின் மகள் என்ற அடையாளங்களுடன் கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.

நான்கு முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் தூத்துக்குடி! வெற்றிக்காக தீவிர பரப்புரையில் கட்சிகள்!

சூடுபிடிக்கும் தூத்துக்குடி தேர்தல் களம்:

தூத்துக்குடி மக்களவை தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுதான் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மக்களைவை தொகுதியாக உருவாக்கப்பட்டது. இதுவரை சந்தித்த 3 தேர்தல்களில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. 2009 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ஜெயதுரையும், 2014 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக - பாஜக கூட்டணி சார்பில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றிபெற்றார். தற்போது இரண்டாவது முறையாக கனிமொழி தூத்துக்குடியில் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத் ஜேன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நான்கு முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் தூத்துக்குடி! வெற்றிக்காக தீவிர பரப்புரையில் கட்சிகள்!

செய்ததும்? செய்யாததும்?

2-வது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு போட்டியிடும் கனிமொழிக்காக, மாநில அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த தேர்தலின்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கென தனியாக தேர்தல் அறிக்கை ஒன்றை கனிமொழி வெளியிட்டார்.அதில் கூறப்பட்ட பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர். குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுத்தது போன்றவற்றை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தூத்துக்குடி தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளும் நிலவி வருகின்றன. ரயில் சேவையில் தூத்துக்குடி பின்தங்கியுள்ளது. தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க மேம்பாலம், சுரங்கப்பாதைகள் தேவை. கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும். புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும். திருச்செந்தூரில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். தாமிரபரணி பாசன குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

நான்கு முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் தூத்துக்குடி! வெற்றிக்காக தீவிர பரப்புரையில் கட்சிகள்!

அ.தி.மு.க. சுறுசுறுப்பு:

கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரண்டு தேர்தலிலும் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவுக்கும் தமாகாவுக்கும் ஒதுக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் சோர்வடைந்து இருந்தனர். இந்நிலையில் தற்போதைய மக்களவை தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதால் உற்சாகத்தில் உள்ளனர் அதிமுகவினர். அதிமுக வேட்பாளர் வெளியூரை சேர்ந்தவர் என அதிமுகவினரே முதலில் சுணக்கம் காட்டிய நிலையில் இரட்டை இலை சின்னமே போட்டியிடுவதால் சுறுசுறுப்புடன் உடன்பிறப்புகள் களத்தில் வேகம் காட்டுகின்றனர்.

நான்கு முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் தூத்துக்குடி! வெற்றிக்காக தீவிர பரப்புரையில் கட்சிகள்!

பாஜக அணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயசீலன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக - பாஜக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 42,004 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மற்றும் மத்தியில் நிலையான ஆட்சியை விரும்பும் மக்களின் வாக்குகள் தங்களுக்கு வரும் என பாஜகவினர் நம்புகின்றனர். இதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு என வழக்கமாக இருக்கும் வாக்கு பலம் இம்முறையும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு அக்கட்சி வேட்பாளரான பல் மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறார். வேட்புமனு தாக்கல் முடிந்து பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

நான்கு முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் தூத்துக்குடி! வெற்றிக்காக தீவிர பரப்புரையில் கட்சிகள்!

நான்குமுனைப் போட்டி நிலவினாலும், இரு கழகங்களுக்கு இடையேயான போட்டிதான் தீவிரமாக இருக்கிறது.கனிமொழி கடந்த தேர்தலில் பெற்ற வெற்றி விகிதத்தை காட்டிலும் கூடுதலாக சுமார் 5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக பேசி வருகிறார். 5 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்பதற்கு சாய்ஸே இல்ல என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget