Lok Sabha Elections 2024: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது ரிலீஸ்? செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது என்று செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இறுதிப் பட்டியில் நாளை வெளியிடப்பட்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவையின் பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அரசியல் கட்சிகள் தொகுதிகளில் போட்டியில் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடுவது, தேர்தல் வாக்குறுதி, தேர்தல் பரப்புரை என தீவிரமாக இருக்கிறது தேர்தல் களம். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தி.மு.க. நேரடியாக களமிறங்கும் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யு.எம்.எல்.), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைக் கட்சி, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவது குறித்து தெரிவிக்கையில்,” ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம். டெல்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் நாளை வெளியாக உள்ளது. கடந்த முறை போட்டியிட்ட ஆரணி, திருச்சி, தேனிக்கு பதிலாக தற்போது காங்கிரஸுக்கு திருநெல்வேலி, கடலூர், மயிலாடுதுறை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் பேசுகையில்," திராவிட இயக்கங்களை ஒழிப்போம் என்ற என்ற பாஜக தலைவர்கள் சொல்வது குறித்து ஓ. பன்னீர்செல்வம், மற்றும் டி.டி.வி. தினகரன் பதில் சொல்ல வேண்டும்". என்று தெரித்துள்ளார்.
”ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க.-யினர் கூறிவருகின்றனர்.” - இது எப்படி நியாயமாக இருக்கும் என்றும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வாசிக்க..
DMK Candidates: திமுக சார்பில் போட்டியிட 6 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு; காரணம் என்ன?