மேலும் அறிய

DMK Candidates: திமுக சார்பில் போட்டியிட 6 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு; காரணம் என்ன?

DMK Lok Sabha Election Candidates: புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சிட்டிங் எம்.பி.க்கள் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தற்போது எம்.பி. ஆக இருக்கும் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி, வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) முதல் தொடங்க உள்ளது. 

திமுக கூட்டணியில் எந்தக் கட்சிகள்?

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தவிர, இதர கட்சிகளுக்கு, மக்களவைக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மாநிலங்களவை ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 19 தொகுதிகள் போக, மீதமுள்ள 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. 

இதில் புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சிட்டிங் எம்.பி.க்கள் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு வாய்ப்பு மறுப்பு?

  1. கவுதமசிகாமணி (கள்ளக்குறிச்சி)
  2. தனுஷ் குமார் (தென்காசி )
  3. செந்தில் குமார் (தர்மபுரி)
  4. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்)
  5. எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்)
  6. சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி)

இதில் திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் அந்தத் தொகுதி மலையரசன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க திமுக முடிவு

அதேபோல் தஞ்சையில் 6ஆவது முறை எம்.பி.யாக உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தஞ்சை தொகுதியில் முரசொலி என்பவர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 6 முறை எம்.பி.யாக இருந்தவரை விடுத்து, இளைஞர்களுக்கு குறிப்பாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க திமுக முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

தருமபுரி எம்.பி.யாக இருந்த செந்தில் குமாருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வழக்கறிஞர் மணி போட்டியிட உள்ளார். சேலம் எம்.பி.யாக இருக்கும் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு பதிலாக செல்வகணபதி போட்டியிடுகிறார்.

தென்காசி எம்.பி. தனுஷ்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மருத்துவர் ராணி என்னும் புதுமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஈஸ்வரசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்ற 2019 திமுக தொகுதிகள்

மயிலாடுதுறை, நெல்லை, திண்டுக்கல், கடலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள 4 எம்.பி.க்களுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget