Lok Sabha Election Result 2024: எந்தெந்த மாநிலங்களில் யாருக்கு வெற்றி? பா.ஜ.க.+ Vs I.N.D.I.A. கூட்டணி - மொத்த விவரம் இதோ!
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்தெந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எந்தெந்த கட்சிகள் அதிகம் வெற்றி பெற்றன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதிக்கம் செலுத்திய கட்சிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மக்களவை தேர்தல் முடிவுகள்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. வாக்குப்பதிவிற்கு பிறகு 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பாஜக கூட்டணியும், 295 இடங்களை கைப்பற்றுவோம் என I.N.D.I.A. கூட்டணியும் பேசி வந்தது. ஆனால், பாஜக கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன.
எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மத்தியில் யார் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக, எந்தெந்த கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. அந்தமான் & நிகோபார் தீவுகள் - 1 தொகுதி:
பாஜக வெற்றி
2. ஆந்திரபிரதேசம் - 25 தொகுதிகள்
தெலுங்கு தேசம் - 16 தொகுதிகளில் வெற்றி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - 4 தொகுதிகளில் வெற்றி
பாஜக - 3 தொகுதிகளில் வெற்றி
ஜனசேனா - 2 தொகுதிகளில் வெற்றி
3. அருணாச்சல பிரதேசம் - 2 தொகுதிகள்
பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி
4. அசாம் - 14 தொகுதிகள்
பாஜக - 9 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 3 தொகுதிகளில் வெற்றி
ஐக்கிய மக்கள் கட்சி - 1 தொகுதியில் வெற்றி
அசோம் கண பரிஷத் - 1 தொகுதியில் வெற்றி
5. பீகார் - 40 தொகுதிகள்
ஐக்கிய ஜனதா தளம் - 12 தொகுதிகளில் வெற்றி
பாஜக - 12 தொகுதிகளில் வெற்றி
லோக் ஜனதா தளம் - 5 தொகுதிகளில் வெற்றி
ராஷ்ட்ரிய ஜனதா தளம்- 4 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 3 தொகுதிகளில் வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகளில் வெற்றி
6. சண்டிகர் - 1 தொகுதி
காங்கிரஸ் வெற்றி
7. சத்தீஸ்கர் - 11 தொகுதி
பாஜக - 10 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 1 தொகுதியில் வெற்றி
8. தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு - 2 தொகுதிகள்:
பாஜக - 1 தொகுதியில் வெற்றி
சுயேச்சை - 1 தொகுதியில் வெற்றி
9. கோவா - 2 தொகுதிகள்
பாஜக - 1 தொகுதியில் வெற்றி
காங்கிரஸ் - 1 தொகுதியில் வெற்றி
10. குஜராத் - 26 தொகுதிகள்
பாஜக - 25 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 1 தொகுதியில் வெற்றி
11.ஹரியானா - 10 தொகுதிகள்
பாஜக - 5 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 5 தொகுதிகளில் வெற்றி
12. இமாச்சல பிரதேசம் - 4 தொகுதிகள்
4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி
13. ஜம்மு & காஷ்மீர் - 4 தொகுதிகள்
ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி - 2 தொகுதிகளில் வெற்றி
பாஜக - 2 தொகுதிகளில் வெற்றி
சுயேச்சை - 1
14. ஜார்க்கண்ட் - 14 தொகுதிகள்:
பாஜக - 8 தொகுதிகளில் வெற்றி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 3 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 2 தொகுதிகளில் வெற்றி
AJSU - 1 தொகுதியில் வெற்றி
15. கர்நாடகா - 28 தொகுதிகள்
பாஜக - 17 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 9 தொகுதிகளில் வெற்றி
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 2 தொகுதிகளில் வெற்றி
16. கேரளா - 20 தொகுதிகள்
காங்கிரஸ் - 14 தொகுதிகளில் வெற்றி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2 தொகுதிகளில் வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1 தொகுதியில் வெற்றி
பாஜக - 1 தொகுதியில் வெற்றி
கேரளா காங்கிரஸ் - 1 தொகுதியில் வெற்றி
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி - 1 தொகுதியில் வெற்றி
17. லடாக் - 1 தொகுதி
காங்கிரஸ் கட்சி வெற்றி
18. லட்சத்தீவு - 1 தொகுதி
காங்கிரஸ் கட்சி வெற்றி
19. மத்தியபிரதேசம் - 29 தொகுதிகள்
29 தொகுதிகளிலும் பாஜக வெற்றி
20. மகாராஷ்டிரா - 48 தொகுதிகள்:
காங்கிரஸ் - 13 தொகுதிகளில் வெற்றி
பாஜக - 9 தொகுதிகளில் வெற்றி
உத்தவ் தாக்ரே சிவசேனா - 9 தொகுதிகளில் வெற்றி
சரத்பவார் தேசிய கட்சி - 8 தொகுதிகளில் வெற்றி
சிவசேனா - 7 தொகுதிகளில் வெற்றி
தேசியவாத காங்கிரஸ் - 1 தொகுதியில் வெற்றி
சுயேச்சை - 1 தொகுதியில் வெற்றி
21. மணிப்பூர் - 2 தொகுதிகள்
காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி
22. மேகாலயா - 2 தொகுதிகள்
மக்கள் குரல் - 1 தொகுதியில் வெற்றி
காங்கிரஸ் - 1 தொகுதியில் வெற்றி
23. மிசோரம் - 1 தொகுதி
ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி
24. நாகலாந்து - 1 தொகுதி
காங்கிரஸ் வெற்றி
25. டெல்லி - 7 தொகுதிகள்
பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி
26. ஒடிஷா - 21 தொகுதிகள்:
பாஜக - 20 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 1 தொகுதி
27. புதுச்சேரி - 1 தொகுதி
காங்கிரஸ் வெற்றி
28. பஞ்சாப் - 13 தொகுதிகள்
காங்கிரஸ் - 7 தொகுதிகளில் வெற்றி
ஆம் ஆத்மி - 3 தொகுதிகளில் வெற்றி
சிரோமனி அகாலி தளம் - 1 தொகுதியில் வெற்றி
சுயேச்சை - 2 தொகுதிகளில் வெற்றி
29. ராஜஸ்தான் - 25 தொகுதிகள்
பாஜக - 14 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 8 தொகுதிகளில் வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1 தொகுதியில் வெற்றி
ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் - 1 தொகுதியில் வெற்றி
பாரத் ஆதிவாசி கட்சி - 1 தொகுதியில் வெற்றி
30. சிக்கிம் - 1 தொகுதி
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி
31. தமிழ்நாடு - 39 தொகுதிகள்
திமுக - 22 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 9 தொகுதிகளில் வெற்றி
விசிக - 2 தொகுதிகளில் வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் - 2 தொகுதிகளில் வெற்றி
இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகளில் வெற்றி
மதிமுக - 1 தொகுதியில் வெற்றி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1 தொகுதியில் வெற்றி
32. தெலங்கானா - 17 தொகுதிகள்:
பாஜக - 8 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 8 தொகுதிகளில் வெற்றி
AIMIM - 12 தொகுதியில் வெற்றி
33. திரிபுரா - 2 தொகுதிகள்
பாஜக 2 தொகுதிகளில் வெற்றி
34. உத்தரபிரதேசம் - 80 தொகுதிகள்
சமாஜ்வாதி கட்சி - 37 தொகுதிகளில் வெற்றி
பாஜக - 33 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 6 தொகுதிகளில் வெற்றி
ராஷ்ட்ரியா லோக் தளம் - 2 தொகுதிகளில் வெற்றி
ஆசாத் சமாஜ் கட்சி - 1 தொகுதியில் வெற்றி
ஆப்னா தளம் - 1 தொகுதியில் வெற்றி
35. உத்தராகண்ட் - 5 தொகுதிகள்
பாஜக 5 தொகுதிகளில் வெற்றி
36. மேற்குவங்கம் - 42 தொகுதிகள்
திரிணாமுல் காங்கிரஸ் - 29 தொகுதிகளில் வெற்றி
பாஜக - 12 தொகுதிகளில் வெற்றி
காங்கிரஸ் - 1 தொகுதியில் வெற்றி