Lok Sabha Election Phase 7: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு; 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் - வாரணாசியில் மோடி
Lok Sabha Election Phase 7: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு, வரும் ஜுன் 1ம் தேதி நடைபெற உள்ளது.
![Lok Sabha Election Phase 7: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு; 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் - வாரணாசியில் மோடி Lok Sabha Election Phase 7 57 constituency across 08 States/UTs for Phase 7 key candidates Lok Sabha Election Phase 7: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு; 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் - வாரணாசியில் மோடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/26/85a2adb354c2bc4e998f05a1cb9a08a01716705228963732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Lok Sabha Election Phase 7: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச், சேர்ந்த 57 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஏழாம் கட்ட வாக்குப்பதிவு:
நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில், ஏற்கனவே 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், 90 சதவிகித தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜுன் 1ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அது நிறைவடைந்ததும், 7 கட்டங்களாக பதிவான வாக்குகளும், மொத்தமாக ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இந்த கட்டத்தில் மோடி போட்டியிடும் வரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், கடைசி கட்ட தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
57 தொகுதிகளின் விவரங்கள்:
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச், சேர்ந்த 57 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 4 தொகுதிகள், ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், ஒடிஷாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
களத்தில் 904 வேட்பாளர்கள்:
57 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 2,105 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனைக்குப் பின் 954 மனுக்கள் செல்லத்தக்கவையாக ஏற்கப்பட்டன. அதிகபட்சமாக பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளில் 598 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தின் 13 மக்களவைத் தொகுதிகளில் 495 மனுக்கள் தாக்கலாகின. பீகாரில் உள்ள ஜஹனாபாத் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 73 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், பஞ்சாபின் லூதியானாவில் 70 மனுக்கள் பெறப்பட்டன.
நட்சத்திர வேட்பாளர்கள்:
பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத், ஹமிர்புர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
இதுவரை பதிவான வாக்குகள்:
இதுவரை ஆறுகட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, முறையே 66.14 சதவிகிதம், 66.71 சதவிகிதம் 65.68 சதவிகிதம், 69.16 சதவிகிதம், 63 சதவிகிதம் மற்றும் 61.22 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் விளவங்கோடு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த அனைத்து தேர்தல்களின் முடிவுகளும், வரும் ஜுன் 4ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)