IPL 2024 Closing Ceremony: ஐபிஎல் நிறைவு விழா - இமேஜின் டிராகன்ஸ் இசை நிகழ்ச்சி.. களைகட்டும் சேப்பாக்கம்
IPL 2024 Closing Ceremony: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, கண்கவரும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
IPL 2024 Closing Ceremony: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில், இசை மற்றும் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல் ஃபைனல் - கலை நிகழ்ச்சிகள்:
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க ராக் இசைக்குழுவான இமேஜின் டிராகன்ஸ் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியை நேரடி நிகழ்ச்சியுடன் மின்மயமாக்க உள்ளது. இந்த உற்சாகமான செய்தியை இசைக்குழுவினர், தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.
இசைக்குழுவின் முன்னணி பாடகர் டான் ரெனால்ட்ஸ் உள்ளிட்டோர், ஐபிஎல் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளதை ஸ்டார் ஸ்போர்ட்ஸும் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
"Virat the GOAT, he's the God of all fans" - Dan Reynolds
— Star Sports (@StarSportsIndia) May 22, 2024
Can you 𝙄𝙈𝘼𝙂𝙄𝙉𝙀? They are ready to light up the night! 😍🥳
From 'Believer' to 'Bones', get ready to feel 'Natural' as we face the 'Thunder' at the #IPL finale with @Imaginedragons! 🎤🔥
Tune into Cricket Live… pic.twitter.com/pne0Yey3dK
ஐபிஎல் 2024 நிறைவு விழா எங்கு நடைபெறும்?
ஐபிஎல் 2024 நிறைவு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2024 நிறைவு விழா எப்போது நடைபெறும்?
ஐபிஎல் 2024 நிறைவு விழா இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.
ஐபிஎல் 2024 நிறைவு விழாவில் யார் பங்கேற்கிறார்கள்?
ஐபிஎல் 2024 நிறைவு விழாவில் அமெரிக்க ராக் இசைக்குழுவான, இமேஜின் டிராகன்ஸ் குழுவின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுபோக லேசர் ஒளிவிளக்குகள் உள்ளிட்ட சில கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேரலையில் எங்கு காணலாம்?
ஐபிஎல் 2024 நிறைவு விழாவின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.