மேலும் அறிய

Postal Vote: வீடு, வீடாக செல்லும் அலுவலர்கள்.. சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!

இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று முதல் தொடங்கவுள்ளது. 

நெருங்கும் வாக்குப்பதிவு நாள்

இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவானது நடக்கிறது. 

ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் மறுபக்கம் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. 

தபால் வாக்குகள் 

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பிற மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த பணியானது இன்று தொடங்குகிறது.

சென்னையை பொறுத்தவரை அம்மாவட்டத்துக்குட்பட்ட 3 தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாக 11, 369 பேரும், 85 வயதுக்குட்பட்ட வாக்காளர்களாக 63,751 பேரும் உள்ளனர். மொத்தமாக 75, 120 பேர் இருக்கும் நிலையில் இவர்களில் 4,538 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தபால் வாக்களிக்கும் வகையிலான 12 டி படிவத்தை வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கினர். பின்னர் நிரப்பப்பட்ட படிவங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இந்த 4, 538 பேரிடமும் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது இன்று முதல் நடைபெற உள்ளது. 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பணியில் மொத்தம் 67 குழுக்கள் ஈடுபடுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் தபால் வாக்கு சேகரிக்கும்  பணியானது வீடு, வீடாக மேற்கொள்ளப்படுகிறது. தபால் வாக்கு சீட்டினை அதிகாரிகள் வழங்கி, எப்படி வாக்களிப்பது என எடுத்துக்கூறி, பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவை திரும்ப பெறப்படுகிறது. 67 குழுவிலும் ஒரு குழுவுக்கு 4 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: PM Modi: பிரதமர் மோடியின் தமிழக பயணத்தில் திடீர் மாற்றம்..! 5 அடுக்கு பாதுகாப்பு, 22,000 போலீசார் குவிப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Embed widget