மேலும் அறிய

lok sabha election 2024: 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில்போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா ராமகிருஷ்ணன் கடந்த 7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கே தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்:

இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.  இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், முதற்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. தொடர்ந்து திருநெல்வேலி தொகுதிக்கு ராபர்ட் ப்ரூஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு கடைசி கட்டத்தில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

lok sabha election 2024: 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு

திடீர் திருப்பம்:

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் முன்னதாக ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் காண அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. அதே போன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான தற்போதைய திருச்சி எம்பி திருநாவுக்கரசுக்கு, திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அவரும் மயிலாடுதுறை தொகுதியை கேட்டு வந்ததாக கூறப்பட்டது.

அதேபோன்று இந்த தொகுதியை சேர்ந்த மூன்று முறை இங்கிருந்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வாகி, மத்திய அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யரும், அவருக்கு வாய்ப்பு வழங்காத பட்சத்தில் அவரது மகளுக்காக இந்த தொகுதியை கேட்டு வந்தாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர். இவ்வாறான சூழலில் காங்கிரஸ் தலைமை வேட்பாளரை தேர்வு செய்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து. இந்த நான்கு பேரில் ஒருவருக்கு தான் சீட் என பரவலாக சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணனுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வாய்ப்பு வழங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி கேட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக இவருக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

lok sabha election 2024: 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு

யார் இந்த சுதா ராமகிருஷ்ணன்?

திருவள்ளுவர் மாவட்ட கும்மிடிப்பூண்டி சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவரின் 45 வயதான மகள் சுதா ராமகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டுமுதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தியுடன் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார்.  விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்ற போது  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பி  சோனியாவின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் என்று அக்கட்சியினரால் குற்றச்சாட்டிற்கு ஆளானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

lok sabha election 2024: 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு

எதிர் வேட்பாளர்கள் யார்? யார்?

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மகன் பாபு என்பவர் போட்டி இடுகிறார். அதேபோல பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை வேட்பாளராக பாமகவைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் என்பவர் களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் களத்தில் உள்ளார். 

lok sabha election 2024: 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு

வெற்றி வாய்ப்பு:

மயிலாடுதுறை தொகுதியில் 11 முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக சொல்லப்பட்டாலும், தற்போது தொகுதிக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு நபரை அறிவித்திருப்பதும், திமுக கூட்டணியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் என்பதால் தொடர்ந்து சொந்த கட்சிக்காக பணி செய்யாமல் கூட்டணி கட்சிகாகவே வேலை செய்யும் சூழல் உள்ளதால் திமுகவினரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் இம்முறை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி என்பது சற்று கடினமானது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

lok sabha election 2024: 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு

வேட்புமனுகள் பரிசீலனை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட காங்கிரஸ்,  பாமக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகளும் சுயேட்சை என மொத்தபாக 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அம்மனுக்கள் மீதான பரிசோதனை வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்புமனு மற்றும் சுயேட்சை என 17 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் 13 வேட்புமனுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

lok sabha election 2024: 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு

7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர்:

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான புதன்கிழமை மதியம் வேட்பு மனுத் தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சுதா. இந்நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் கடந்த 7 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்ததில்லை என  குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வேட்பு மனுவில் கடைசி 5 ஆண்டுகளில் தான் ஈட்டிய வருமானம் குறித்து வருமான வரி தாக்கல் செய்த விவரத்தை குறிப்பிட வேண்டும். கடந்த 2016-2017 -ஆம் நிதியாண்டில் கடைசியாக இவர் வருமான வரிக்கணக்கு தாக்கல்  செய்துள்ளார். அதில், ஆண்டு  வருமானம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 080 ரூபாய் என கணக்கு காட்டியுள்ளார். அதன் பிறகு அவர் வருமான வரி தாக்கல் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

lok sabha election 2024: 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு

நாம் தமிழர் எதிர்ப்பு:

இந்த சூழலில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தேர்தல் பொது பார்வையாளர் கண்ஹூர் ராஜ்  ஹச் பகதே மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவின் வேட்பு மனு பரிசீலனையின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் எதிர்ப்பு தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்துள்ள உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனவும், அவருடைய வங்கி கணக்கில் 11 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பு இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்தார்.  இருந்தபோதிலும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவின் மனு ஏற்கப்பட்டதால், அங்கிருந்து வெளிநடப்பு செய்தார். மேலும் இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.