மேலும் அறிய
Advertisement
Local body election | பணம் தர வேண்டாம்; கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - வேட்பாளரிடம் கோரிக்கை வைத்த வாக்காளர்கள்
சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 325.84 மில்லி கன அடி வீதமும், மீதமுள்ள நீரை பழைய ஆயக்கட்டு நேரடி பாசனத்துக்கு இன்று முதல் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனயடுத்து தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 10, 12, 14 வார்டுகளில் போட்டியிடும் அதிமுகவை சேர்ந்த பாபு, தாஜ்முதின், மணிமேகலை ஆகிய வேட்பாளர்கள் தனித்தனியாக திருவிக நகர், கோவிந்தசாமி நகர், பாட்சாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அப்பொழுது கோவிந்தசாமி நகரில் உள்ள வீட்டில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். அப்பொழுது பெண் வாக்காளர் ஒருவர், எங்களுக்கு பணம் தேவையில்லை. எங்கள் பகுதிக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளது. எங்கள் தெரிவித் முனையில் நிரந்தரமாக குப்பைத் தொட்டி அமைக்கவும். கழிவுநீர் கால்வாயை அடிக்கடி சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்பொழுது அதிமுகவினர் செய்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால் பெண் வாக்காளர், கோரிக்கையை செய்து தராவிட்டால், அலுவலகத்திற்கே வந்துவிடுவேன் என தெரிவித்தார்.
வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 325.84 மில்லியன் கன அடி நீர் திறப்பு
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு நீர்த்தேக்கம், கடந்த நவம்பர் மாதம் நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. இந்த நிலையில், 2021-22-ம் ஆண்டு புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வாணியாறு நீர்த்தேக்கத் திட்ட வரைவு விதிகளின் படி புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 4 நனைப்புக்கு 65 நாட்களுக்கும் நாளொன்றுக்கு 325.84 மில்லி கன அடி வீதமும், மீதமுள்ள நீரை பழைய ஆயக்கட்டு நேரடி பாசனத்துக்கு இன்று முதல் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாணியாறு அணையிலிருந்து வினாடிக்கு 325.84 மில்லி கனஅடி தண்ணீரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்து வைத்தார்.
மேலும் இடதுபுறக் கால்வாய் மூலம் மோளையானூர், வெங்கடசமுத்திரம், தேவராஜபாளையம், மெணசி, ஆலாபுரம், பூதநத்தம், தென்கரைகோட்டை, ஜம்மனஅள்ளி ஆகிய ஏரிகளுக்கும், வலதுபுறக் கால்வாய் மூலம் மோளையானூர், கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பாசன விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion