Local Body Election | தஞ்சை மாவட்டத்தில் 459 பதவிக்கு 2865 பேர் வேட்பு மனு தாக்கல்
வேட்புமனுத்தாக்கல் விவரம்தஞ்சாவூர் மாநகராட்சி - 391கும்பகோணம் மாநகராட்சி - 443 பட்டுக்கோட்டை நகராட்சி - 189அதிராம்பட்டினம் நகராட்சியில்- 172 20 பேரூராட்சிகளில் 1,670 பேர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 2,865 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி 28 ஆம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஜனவரி 29 ஆம் தேதி 3 பேரும், ஜனவரி 31 ஆம் தேதி 49 பேரும், பிப்ரவரி 1 ஆம் தேதி 35 பேரும், 2 ஆம் தேதி 149 பேரும், 3 ஆம் தேதி 1,239 பேரும் தாக்கல் செய்தனர். இந்நிலையில், நிறைவு நாளில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 155 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 239 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 64 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 106 பேரும், இருபது பேரூராட்சிகளில் 826 பேரும் என மொத்தம் 1,390 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மாவட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 391 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 443 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 189 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 172 பேரும், இருபது பேரூராட்சிகளில் 1,670 பேரும் என மொத்தம் 2,865 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 459 பதவிக்கு 2865 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திரும்பப் பெறுதல், வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் தேமுதிக சார்பில் மாநகராட்சி 19 வது வார்டிற்கு மாற்றுத்திறனாளியான துரையும், 37 வது வார்டில் பிரியாடேவிட்டும், 44 வது வார்டில் ஹசினாபேகம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அவர்கள் மூன்று பேரும் ரோஜா பூ மாலை அணிந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதே போல் 36 வது வார்டு திமுக வட்ட செயலாளர் துளசிராமன் மனைவி பரிதா வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் 36 வது வார்டு திமுக கூட்டணியான சிபிஎம் ஒதுக்கியதால், ஆத்திரமடைந்த வட்ட செயலாளர் தனது மனைவியை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தஞ்சை மாநகராட்சியில் திமுக நிர்வாகிகளால், கட்சியில் உள்ளவர்களுக்கு சீட் வழங்காததால், பெரும்பாலான வார்டுகளில் திமுகவினர் சுயேச்சையாக சீட் கட்டியுள்ளனர். இதனால் திமுகவினர்கள், சுயேச்சை வேட்பாளர்களை சரிகட்டவும், சில திமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த பரிதா கூறுகையில், 36 வது வார்டில் சீட் கேட்டு திமுகவில் சீட் கட்டி இருந்தோம். ஆனால் திமுக கூட்டணியான சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கினார்கள். ஆனால் சிபிஎம் கட்சியினர், அந்த வார்டில் ஆட்கள் இல்லை. எங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, எங்களுக்கு சீட் கொடுக்க கூடாது என்ற காரணத்தால், ஒதுக்கிய சீட் ஒதுக்கியது தான் மாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்.
இதனால் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள், வேறு வார்டில் உள்ளவர்களை, 36 வது வார்டில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். எங்களை கட்சியிலிருந்து ஒதுக்கியவர்களை பாடம் கற்பிபிக்கும் வகையில், நாங்கள் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரை தோற்கடிப்போம். தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில் வேறு வார்டுகளை சேர்ந்தவர்களையும், கட்சியில் விஸ்வாசமாக இருப்பவர்களுக்க சீட் வழங்காமல், தனக்கு சாதகமாக உள்ளவர்களுக்கு மட்டும் சீட் வழங்கியுள்ளனர். திமுக தலைமை இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.