Delhi CM Face: டெல்லி முதலமைச்சராகப்போவது யார்?

Published by: ABP NADU
Image Source: PTI

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.

முடிவுகளில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் அடுத்த முதலமைச்சர் பதவிக்காக சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

1. துஷ்யந்த் குமார் கௌதம்

பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் கரோல் பாக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துசஷயந்த் குமார் கௌதம். 67 வயதான இவர் பாஜக-வின் தேசிய பொதுச்செயலாளரும், தலித் தலைவருமாக இருக்கிறார்.

2. பர்வேஷ் வர்மா

டெல்லி முன்னாள் முதலமைச்சர் சாஹிப் சிங் வர்மாவின் மகன். அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டு வீழ்த்திய இவரின் ஜாட் சமூக பின்னணி இவரை முக்கிய முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது.

3. அர்விந்தர் சிங் லவ்லி

காந்தி நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற இவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜக-வில் இணைந்தார்.

4. விஜேந்தர் குப்தா

இவர் மூத்த பாஜக தலைவர் என்பதால் முதலமைச்சராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

5. சதீஷ் உபாத்யாய்

பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி பிரிவின் முன்னாள் தலைவர் ஆவார். மாளவியா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.