ஒசூர் மாநகராட்சி முதல் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை திமுக கைப்பற்றியது
ஒசூர் மாநகராட்சி திமுக சார்பில் முதல் மேயராக எஸ்.ஏ.சத்யா துணை மேயர் பதவியை ஆனந்தய்யா தேர்வு செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு மாநகராட்சியான மாவட்டத் தலைநகரம் அல்லாத ஓசூர் மாநகராட்சி இங்கு முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ளது. இந்நிலையில், மாநாகராட்சியில் மொத்தமுள்ள 45 வார்டுகளில், திமுக 21 வார்டுகளிலும், இரண்டாவது இடத்தில் அதிமுக 16 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.பாஜக 1 வார்டிலும், பாட்டாளி மக்கள் கட்சி 1 வார்டிலும், காங்கிரஸ் கட்சி 1 வார்டிலும், மற்றும் சுயேச்சைகள் வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.இதில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைந்தார். இதில் சுயேச்சை வேட்பாளர்கள் ஐந்து நபர்கள் திமுகவில் இணைந்தனர். காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஒருவரை சேர்த்து 28 நபர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மொக்க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இவர்கள் அனைவரும் நேற்று மாநகராட்சி அலுவலக கூடத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தற்போது திமுக சார்பில் 28 நபர்களும் , அதிமுக சார்பில் 16 நபர்களும் , பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒருவரும் என அதிமுக சார்பில் 17 நபர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று மார்ச் 4 (வெள்ளிக்கிழமை) ஓசூர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்காக இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் ஏ. சத்தியாவும் அதிமுக சார்பில் எஸ் நாராயணன் ஆகியோர் மாநகராட்சி அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர் அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ் ஏ சத்தியா 27 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ் நாராயணன் 18 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற எஸ் ஏ சத்தியாவிற்கு திமுக கட்சி நிர்வாகிகள் அவருக்க மாலைகள் அனுவிக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் 2 மணிக்கு நடைப்பெற்றது.இதில் திமுகவின் சார்பில் ஆனந்தய்யாவும் அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் ஆகியோர் மாநகராட்சி அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.இதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆனந்தய்யா 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட ஜெயபிரகாஷ் 19 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதையடுத்து ஓசூர் மேயராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஏ.சத்யா மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா ஆகிய இருவரையும் மாவட்ட செயலாளர் ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் வாழ்த்து தெரிவித்தார், தொடர்ந்து இருவரும் பதவி ஏற்றுக்கொண்டார்.