மேலும் அறிய
Advertisement
அதிக வாக்குகளை பெற்றுத்தந்தால் தங்க மோதிரம் பரிசு - திமுக மாவட்ட செயலாளர் தடங்கும் சுப்பிரமணி
''முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு சவரன் தங்க மோதிரமும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு அரை சவரன் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்படும்''
தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், உள்ள மாவட்ட ஊராட்சி குழு 18-வது வார்டு உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த தாமரைச்செல்வன், கடந்த ஆறு மாதங்களுக்கு உயிரிழந்தார். தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே தேதியில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டு மலைவாழ் மக்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் லதா தாமரைச்செல்வன் போட்டியிடுகிறார்.
நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஏ.பள்ளிப்பட்டி வேட்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், நடைபெற இருக்கின்ற ஊராட்சி குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்று உயிரிழந்த தாமரைசெல்வன், மனைவி லதாவுக்கு தலைமைக் கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது. எனவே இந்தத் தேர்தலில் தாமரைச்செல்வன் வெற்றி பெற்றதை விட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில, லதாவை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும் அதற்காக கழகத் தோழர்கள் அனைவரும் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம், திண்ணைப் பிரச்சாரம் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இந்த 18-வது வார்டு பகுதியில் 15 கிராம பஞ்சாயத்துகள் வருகிறது. இதற்கு மூன்று ஒன்றிய செயலாளர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த மூன்று ஒன்றிய செயலாளர்களும் கடுமையாக உழைத்து, நாம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
அவ்வாறு அதிகமான வாக்கு வித்தியாசத்தை வாங்கி தருகின்ற ஒன்றிய செயலாளர்களுக்கு, தருமபுரி மாவட்ட திமுக சார்பில், முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு சவரன் தங்க மோதிரமும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு அரை சவரன் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்படும். அதேபோல் கிராம ஊராட்சிகளில் வெற்றிக்காக உழைக்கும் கிளை பொறுப்பாளர்களுக்கு, மின்சாரம், போக்குவரத்து துறை உள்ளிட்ட 34 துறைகளில் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் போது, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறி, தடங்கம் சுப்பிரமணி தொண்டர்களை உற்சாகப்படுத்தி பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திமுக ஒன்றிய செயலாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், கொங்குநடு மக்களுக்குரிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதனைத்தொடர்ந்து சமயபுரம் கூட்டு ரோட்டில் தேர்தல் அலுவலகத்தினை மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி திறந்து வைத்தார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion