தொடங்கியது சட்டப்பேரவைத் தேர்தல்: டெல்லியை ஆளப்போவது யார்? விறுவிறு வாக்குப்பதிவு
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் உத்திரபிரதேசத்தில் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் உத்திரபிரதேசத்தில் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. டெல்லி தேர்தலுக்காக நடைபெற்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் நேற்று முன் தினமே முடித்துக்கொண்டன.
டெல்லி தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,, தற்போதைய முதலமைச்சர் அதிஷி, முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன.
புது டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவின் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவும் காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித் களமிறங்குகின்றனர்.
15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலா தீட்சித்தை கிட்டதட்ட 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். 2013 ஆம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து 2015, 2020 என தொடர்ந்து மூன்று முறை கெஜ்ரிவால் டெல்லியை கைப்பற்றியிருந்தார்.
இந்த முறை டெல்லியில் ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் போட்டியிடுகிறார். டெல்லி முதல்வர் அதிஷி கால்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் துணை முதல்வர் ஜங்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பதவியை இழந்த மணீஷ் சிசோடியாவை எதிர்த்து தர்விந்தர் சிங் வர்வா, காங்கிரஸின் பர்ஹாத் சூரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அப்போது டெல்லியை ஆளப்போவது யார் என்பது தெரியவரும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

