ராவணன் போல உங்களுக்கு 100 தல இருக்கா? - பிரதமரிடம் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே..!
அகமதாபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி குறித்து கருத்து ஒன்றை கூறியுள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் மற்றும் டிசம்பர் 5 தேதிகளில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
வரும் டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி குறித்து கருத்து ஒன்றை கூறியுள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசிய கார்கே, "மோடி ஒரு பிரதமர். வேலையை மறந்து கார்ப்பரேஷன் தேர்தல், எம்எல்ஏ தேர்தல், எம்பி தேர்தல் என எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்கிறார். எந்நேரமும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.
मोदी जी प्रधानमंत्री हैं। वह काम छोड़कर नगर निगम का चुनाव, MLA का चुनाव, MP के चुनाव में प्रचार करते रहते हैं।
— Congress (@INCIndia) November 29, 2022
हर वक्त अपनी ही बात करते हैं - 'आप किसी को मत देखो, मोदी को देखकर वोट दो।'
आपकी सूरत कितनी बार देखें? आपके कितने रूप हैं? क्या रावण की तरह 100 मुख हैं?
- @kharge जी pic.twitter.com/Iy6hYQfuhc
'நீங்கள் வேற யாரையும் பார்க்க வேண்டாம், மோடியைப் பார்த்து ஓட்டு போடுங்கள்'. உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறை பார்க்கிறோம்? உங்களிடம் எத்தனை அவதாரங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் உள்ளதா?
நகராட்சித் தேர்தலோ, மாநகராட்சித் தேர்தலோ, மாநிலத் தேர்தலோ. மோடியின் பெயரை சொல்லி வாக்கு கேட்கின்றனர். வேட்பாளரின் பெயரில் வாக்குகளைக் கேளுங்கள். முனிசிபாலிட்டிக்கு மோடி வந்து வேலை செய்யப் போகிறாரா? உங்கள் தேவையின் போது அவர் உங்களுக்கு உதவப் போகிறாரா?" என்றார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, கார்கேவின் கருத்தை விமர்சித்துள்ளார்.
"குஜராத் தேர்தல் சூட்டை தாங்க முடியாமல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வார்த்தைகளை கட்டுப்படுத்தாமல், பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என்று அழைக்கிறார்.
"மௌத் கா சவுதாகர்(மரணத்தின் வியாபாரி)" முதல் "ராவணன்" வரை காங்கிரஸ் குஜராத்தையும் அதன் மகனையும் தொடர்ந்து அவமதித்து வருகிறது" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.